digit zero1 awards

ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது…!

ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது…!
HIGHLIGHTS

Oppo இந்தியாவில் அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதன் Oppo Find X ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துய்விட்டது, இதன் விலை Rs 59,990இருக்கிறது.

Oppo இந்தியாவில்  அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதன் Oppo Find X ஸ்மார்ட்போன் அறிமுகம் 
செய்துய்விட்டது, இதன் விலை  Rs 59,990இருக்கிறது புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/be6b1520edb2de7731501424b08f7002c9fc6629.jpeg

இத்துடன் இதில் போட்டோக்கள் எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. 

https://static.digit.in/default/b3f05e47a23f52bc0507975ecf01caa2e8343961.jpeg

இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D இமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.

ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

– 6.42 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம்
– 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
– டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB டைப்-C 
– 3,730 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/fadbe12adcdf5a5b4fe19b7a6a7f422e83ded946.jpeg

இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 மதிப்பிலான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo