ஒப்போசமீபத்தில் இந்தியாவில் Oppo F25 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த போன் ஒப்போவின் F-சீரிஸ் வரிசையில் சமீபத்திய கூடுதலாகும். இப்போது நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியனட் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நிறுவனம் ஒரு புதிய கோரல் பர்பிள் கலர் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஏற்கனவே இருக்கும் லாவா ரெட் மற்றும் ஓஷன் ப்ளூ விருப்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது அதன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
Oppo F25 Pro 5G இந்த போன் இரண்டு வேரியண்டில் இருக்கிறது இது 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபியில் வருகிறது, இதன் விலை முறையே ரூ. 23,999 மற்றும் ரூ. 25,999. இந்த ஸ்மார்ட்போனை Amazon, Flipkart மற்றும் ஒப்போ India ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ரீடைலர் விற்பனைக் கடைகளிலும் நீங்கள் அதை ஆஃப்லைனில் பெறலாம்.
ஆபர்களை பற்றி பேசினால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ரூ.2000 வரை கேஷ்பேக் பெறலாம். இது தவிர, அனைத்து முன்னணி பேங்க் கார்டுகளிலும் 6 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI விருப்பமும் கிடைக்கிறது.
இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் 1080 x 2412 பிக்சல் தீர்மானம் உள்ளது. இந்த கர்வ்ட் டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரெட்டை வழங்குகிறது மற்றும் பாண்டா கிளாஸ் லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
பர்போமன்சுக்காக இந்த ஃபோனில் 8GB RAM உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் MediaTek Dimansity 7050 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போவின் இந்த இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது, இது நிறுவனத்தின் சொந்த ColorOS 14 லேயருடன் ஆதரிக்கப்படுகிறது.
இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் இதில் மூன்று பின்புற கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 64MP மெயின் கேமரா சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். போனின் முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவும் உள்ளது. மேலும் இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரும் இதில் 5000mAh பேட்டரியில் இருந்து பவர் கொண்டுள்ளது
கூடுதல் அம்சங்களைப் பற்றி பேசுகையில், Oppo F25 Pro ஆனது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இது IP67 மதிப்பீட்டில் வரும் நிறுவனத்தின் மிக மெல்லிய போனகும் , இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் வரும்.
இதையும் படிங்க: Samsung Galaxy M55 5G அறிமுக தகவல் டீஸ் விலை லீக்