digit zero1 awards

Oppo F25 Pro 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் 5அம்சங்கள் பாருங்க

Oppo F25 Pro 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் 5அம்சங்கள் பாருங்க

ஒப்போ இந்திய சந்தையில் Oppo F25 Pro 5G போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 2022 யில் அறிமுகம் செய்யப்பட்ட ppo F21 Pro 5G யின் இடத்தை பிடிக்கும் இந்த போன் ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான டிசைன் பட்ஜெட்-நிலை சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் MediaTek ப்ரோசெசர் AMOLED டிஸ்ப்ளே, ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. Oppo F25 Pro 5G யின் அம்சங்கள் மற்றும் விலைகளை தெளிவாக பார்க்கலாம்.

Oppo F25 Pro 5G யின் விலை

Oppo F25 Pro 5G யின் விலை பற்றி பேசினால், ஒப்போ யின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனின் விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.23,999 யில் தொடங்குகிறது, அதே நேரத்தில் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலை ரூ.25,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் இரண்டு கலர் விருப்பங்கள் உள்ளன; லாவா ரெட் மற்றும் ஓஷன் ப்ளூவில் வருகிறது. இந்த போன் தற்போது Amazon மற்றும் Oppo யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கிறது, அதே நேரத்தில் மார்ச் 5 முதல் ஷிப்பிங் தொடங்கும். Oppo இ-ஸ்டோர் மூலம் ப்ரீ செக்யூரிட்டி 12 மாதங்களுக்கு கூடுதல் ஸ்க்ரீன் பாதுகாப்பு திட்டத்தையும் நிறுவனம் வழங்குகிறது.

Oppo F25 Pro 5G யின் டாப் அம்சங்கள்

Oppo F25 Pro 5G டிஸ்ப்ளே

Oppo F25 Pro 5G யில் 6.7 இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 2412 x 1080 பிக்சல்க இருக்கிறது (FHD+), 394 PPIமற்றும் 10 பிட் ஆழமான கலர்களை வழங்குகிறது, டிஸ்ப்ளே HDR10+ உள்ளடக்கம் மற்றும் 1100 nits உள்ளூர் ஹை ப்ரைட்னாஸ் நிலை ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது

ப்ரோசெச்சர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் இருக்கிறது

ரேம் ஸ்டோரேஜ்

இந்த போனில் LPDDR4x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இல் வேலை செய்கிறது. ஃபோன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிடண்டிர்க்கான IP65 ரேட்டிங் பிளேட் பிரேம் டிசைனை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Phonepe– Gpay போல இனி WhatsApp யிலும் பணம் அனுப்பலாம்

கேமரா

இந்த போனின் கேமரா செட்டிங் பற்றி பேசுகையில் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், அதன் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு யூனிட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஃபோனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo