Oppo F25 Pro 5G அறிமுக தேதி வெளியானது Amazon லிஸ்டிங்

Oppo F25 Pro 5G அறிமுக தேதி வெளியானது Amazon லிஸ்டிங்

ஒப்போ அதன் Oppo F25 Pro 5G போனில் வேலை செய்கிறது கடந்த சில நாட்களாக வாரங்களாக விரைவில் இந்தியாவில் ஒப்போ F-சீரிஸ் கொண்டுவரப்போவதாக வதந்தி பரவி வருகிறது, Oppo F25 Pro 5G பிப்ரவரி 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இன்று பிராண்ட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அமேசானில் கிடைக்கும் மைக்ரோசைட்டில் இருந்து அதன் வடிவமைப்பு மற்றும் கலர் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Oppo F25 Pro 5G யின் டிசைன்

Amazon யின் மைக்ரோசைட் யில் தகவலை கொண்டு வந்துள்ளது, Oppo F25 Pro 5G ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும், இது பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் டிரிபிள் கேமரா யூனிட் மற்றும் LED ஃபிளாஷ் உள்ளது. இது மெரூன் மற்றும் லைட் ப்ளூ ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்படும். இந்த வகைகளின் மார்க்கெட்டில் ஷேட்கள் இன்னும் அறியப்படவில்லை.

F25 Pro 5G எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

ஒப்போ இதுவரை Oppo F25 Pro 5G சிறப்ப்ம்சங்களின் பற்றி எந்த தகவல்களையும் வழங்கவில்லை Oppo Reno 11F 5G ஆனது, சில தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் கிடைக்கும் Oppo Reno 11F 5G யின் மாற்றியமைக்கப்பட்ட அல்லது ரீப்ரான்ட் வெர்சனக இருக்கலாம் என்று வதந்திகள் வெளியாகியுள்ளன. Reno 11F 5G ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டுள்ளது. காட்சி பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இந்த போனில் டைமன்ஷன் 7050 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 யில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க: Xiaomi 14 இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும்

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இந்த போனில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 மேகபிக்சல் மேக்ரோ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அதுவே அதே நேரத்தில், அதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. Reno 11F 5G 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது.

ஒப்போ F25 Pro 5G பற்றிய எந்த தகவல்களும் தற்பொழுது கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு வந்த Oppo F23 5G இன் விலை ரூ.24,999 ஆகவும், F25 Pro விலை ரூ.30,000 ஆகவும் இருந்தது. பிராண்ட் F25 இன் புரோ அல்லாத வெர்சனை கொண்டுவருகிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo