இந்தியாவில் வாட்டர் ட்ராப் நோட்ச் உடன் OPPO A5S,அறிமுகம், விலை என்ன தெரியுமா .

இந்தியாவில் வாட்டர் ட்ராப் நோட்ச்  உடன்  OPPO A5S,அறிமுகம், விலை  என்ன தெரியுமா .
HIGHLIGHTS

ஒப்போ A5s இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இது 9,990 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

சமீபத்தில் ஸ்மார்ட்போன் நிறுவனமான Oppo  அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒப்போ A5s இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால், 91 மொபைல்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன, அதில் இந்தியாவில் ஓப்போ ஏ 5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் விலையும் அறிக்கையில் வெளிவந்துள்ளது. விலையைப் பற்றி பேசினால், அது ஒரு பட்ஜெட் போனாக வழங்கப்பட்டது, இது 9,990 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போனை  கொண்டு ஆன்லைனில் அறிவிப்பு  வெளிவந்துள்ளது ஒப்போ A5s தற்பொழுது ஆஃப்லைன் ரிடைலர் கடைகளில் கிடைக்கும். இந்தத் போன்களை வாங்கும்போது பயனர்களுக்கு இந்த ரிடைலர் விற்பனையாளர்கள் அறிமுக சலுகை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போன், விரைவாக ஆன்லைன் E commerce  கடைகளிலில்  விற்பனை செய்யப்படும் இப்போது அறிமுக  சலுகை அறிவிப்புகளின் பேச்சு, அதன் விவரங்கள் தற்போது கிடைக்கவில்லை, எனவே பயனர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும்.

 OPPO A5S,சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் HD பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 Mah பேட்டரி

OPPO A5S, என அழைக்கப்படும் இந்த மாடலில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520×720 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டா-கோர் சிப்செட், IMG GE8320 GPU, 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. மெமரியை பொருத்தவரை 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, f/2.2 + f/2.4, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓ.எஸ். 8.1 மற்றும் 4230 Mah பேட்டரி கொண்டிருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo