Oppo குறைவான 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது!

Oppo குறைவான 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது!
HIGHLIGHTS

போனில் 6.56 இன்ச் HD + டிஸ்ப்ளே 90Hz ரிபெரேஸ் ரெட்டுடன் உள்ளது.

MediaTek Dimensity 810 ப்ரோசிஸோர் கூடிய கிராபிக்ஸ் Mali G57 MC2 GPU, 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ்.

புதிய போனில் 5000mAh பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.

Oppo தனது புதிய 5G போனான Oppo A56s 5G  உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo A56s 5G என்பது அக்டோபர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A56 5G யின் அப்கிரேட் வெர்சன் ஆகும். MediaTek Dimensity 810 ப்ரோசிஸோர் Oppo A56s 5G உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய மாடல் Dimensity 700 ப்ரோசிஸோர் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது, இருப்பினும் இந்த புதிய போன் Oppo A56 5G போன்றது. புதிய போனில் 5000mAh பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.

Oppo A56s 5G யின் விலை

Oppo A56s 5G யின் 8GB ரேம் கொண்ட 128 GB ஸ்டோரேஜ் விலை 1,099 சீன யுவான் அதாவது சுமார் ரூ.13,322. அதே நேரத்தில், 8GB ரேம் கொண்ட 256GB ஸ்டோரேஜின் விலை 1,299 சீன யுவான் அதாவது சுமார் ரூ.15,748 ஆக வைக்கப்பட்டுள்ளது. போன் கருப்பு மற்றும் நீல கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் விற்பனை சீனாவில் தொடங்கியுள்ளது, தற்போது இந்தியா உட்பட உலக சந்தையில் அதன் கிடைக்கும் தன்மை குறித்து கம்பெனி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Oppo A56s 5G யின் ஸ்பெசிபிகேஷன்

Oppo A56s 5G ஆனது டூவல் சிம் சப்போர்ட் உடன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS UI கொண்டுள்ளது. இது தவிர, போனில் 6.56 இன்ச் HD + டிஸ்ப்ளே 90Hz ரிபெரேஸ் ரெட்டுடன் உள்ளது. MediaTek Dimensity 810 ப்ரோசிஸோருடன் கூடிய கிராபிக்ஸ் Mali G57 MC2 GPU, 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ்.  

Oppo A56s 5G இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 13 மெகாபிக்சல்கள் மற்றும் இரண்டாவது லென்ஸ் போர்ட்ரெய்ட் ஆகும். கேமராவுடன் டூயல் LED பிளாஷ் லைட் கிடைக்கும். Oppo யின் இந்த போனில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கும்.

இப்போது பேட்டரி மற்றும் கனெக்ட்டிவிட்டிற்கு, இது 5G, Wi-Fi 802.11ac, புளூடூத் v5.2, GPS, USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மொபைலில் பேஸ் அன்லாக் மற்றும் சைடு மௌன்டெட் பொருத்தப்பட்ட பிங்கர் சென்சார் உள்ளது. Oppo A56s 5G ஆனது 10W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo