ஒப்போ சீனாவில் Oppo A2x ஐ ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ A1x யின் வாரிசு ஆகும். புதிய A2x ஆனது 90Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப், பெரிய பேட்டரி மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை வழங்கும் ஒரு என்ட்ரி லெவல் 5G ஃபோன் ஆகும். இந்த போனில் இருக்கும்.
முன்பக்கத்தில் தொடங்கி, ஒப்போ A2 ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 13.1 யில் இந்த போன இயங்குகிறது மற்றும் பக்கவாட்டு பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
ஒப்போ யின் புதிய ஸ்மார்ட்போன் 6GB / 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB / 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. பர்போம்ன்சுக்காக இந்த போனில் டிமான்சிட்டி 6020 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 5000mAh பேட்டரியை வழங்குகிறது ஆனால் அதன் வேகமான சார்ஜிங் பவர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் அதிகாரப்பூர்வ பட்டியலில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், TENNA பட்டியலின் படி சாதனத்தில் LED ப்ளாஷ் உடன் பின்புறத்தில் 13MP முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம். போனின் முன்பக்கத்தில் 5எம்பி செல்ஃபி கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் IP64 ரேட்டிங் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் சேஸ் உள்ளது, அதன் பரிமாணங்கள் 163.8 x 75.1 x 8.12 mm மற்றும் 185 கிராம் எடையுடையது.
ஒப்போ A2X விற்பனை இதன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 1,099 யுவான் (தோராயமாக ரூ. 12,700), 8ஜிபி + 256ஜிபி மாடல் 1,399 யுவான் (தோராயமாக ரூ. 16,200) விலையில் வருகிறது. கருப்பு, தங்கம் மற்றும் ஊதா நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
Nokia G42 5G புதிய பிங்க் கலர் யின் 16 GB ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகும்