Oppo A1 Pro ஸ்மார்ட்போன் 108MP கேமரா மற்றும் கர்வ்ட் டிஸ்பிளே உடன் அறிமுகம்.

Updated on 17-Nov-2022
HIGHLIGHTS

ஒப்போ தனது புதிய பட்ஜெட் போனான Oppo A1 Pro ஐ சீனாவில் அறிமுகம் செய்துள்ளது

இந்த ஃபோன் 120Hz அப்டேட் வீத டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் வழங்கப்படும்

Oppo A1 Pro உடன் 6.7-இன்ச் முழு HD பிளஸ் OLED டிஸ்ப்ளே கிடைக்கும்

ஸ்மார்ட்போன் பிராண்டான ஒப்போ தனது புதிய பட்ஜெட் போனான Oppo A1 Pro ஐ சீனாவில் அறிமுகம் செய்துள்ளது  சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் போனின் போஸ்டரையும் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த ஃபோன் 120Hz அப்டேட் வீத டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் வழங்கப்படும். அதே நேரத்தில், ஃபோன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைப் பெறலாம்.

Oppo A1 Pro சிறப்பம்சம்.

Oppo A1 Pro உடன் 6.7-இன்ச் முழு HD பிளஸ் OLED டிஸ்ப்ளே கிடைக்கும், இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அதே நேரத்தில், போன் 12 ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 256 ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜிர்க்கான ஆதரவைப் பெறும். ஃபோனில் இரட்டை ஸ்பீக்கர் செட்டிங்கை ஆதரிக்கப்படும்.

பேனல் 2160Hz PWM டிம்மிங் மற்றும் 4096 அளவு பிரகாசத்தை ஆதரிக்கிறது. இது DCI-P3 வண்ண ரேஞ்சில் 100% உள்ளடக்கியது மற்றும் 93% ஸ்க்ரீன் -பாடி ரேஷியோவை கொண்டுள்ளது.

Oppo A1 Pro கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், ஃபோனுடன் இரட்டை கேமரா உள்ளது, இதில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்படும். இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல்களில் கிடைக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு போனில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா லென்ஸ் வழங்கப்படும்.

Oppo A1 Pro உடன் 4,700mAh பேட்டரி கிடைக்கும், இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும். பாதுகாப்பிற்காக பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆதரவும் போனில் வழங்கப்படும்

Oppo A1 Pro விலை தகவல்

Oppo A1 Pro சீனா விலை மற்றும் விற்பனையை பொறுத்து வைக்கப்பட்டுள்ளது 

8GB + 128GB – ¥1,799 ($254)
8GB + 256GB – ¥1,999 ($282)
12GB + 256GB – ¥2,299 ($325)

இது மூன் சீ பிளாக், டான் கோல்ட் மற்றும் மார்னிங் ரெயின் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

போன் தற்போது ப்ரீ ஆர்டருக்கு உள்ளது மற்றும் நவம்பர் 25 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :