OnePlus Summer Launch Event; ஜூலை 16 நடக்கிறது Nord 4 உட்பட பல வரும்

Updated on 05-Jul-2024
HIGHLIGHTS

OnePlus Summer Launch Event நிகழ்வை ஜூலை 16 ஆம் தேதி நடத்த உள்ளது

இந்த நிகழ்வு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற உள்ளது.

OnePlus யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மைக்ரோசைட்டில் காணலாம்.

Oneplus நிறுவனத்தின் வரவிருக்கும் நிகழ்வின் தேதியை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது OnePlus Summer Launch Event நிகழ்வை ஜூலை 16 ஆம் தேதி நடத்த உள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வில் நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் சாதனங்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான தகவல்களும் வரும் நாட்களில் வரும் என்று கூறலாம். கடந்த ஆண்டைப் பற்றி நாம் பேசினால், நிறுவனம் அதன் Nord சாதனத்தை கோடைகால வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது, இது தவிர, TWS இயர்போன்களும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.

OnePlus Summer Launch Event எப்பொழுது நடைபெறும்

இந்த ஆண்டு ஜூலை 16, 2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் நேரம் 6:30PM IST, இருப்பினும் இந்த நிகழ்வு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் அட்டையை OnePlus யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மைக்ரோசைட்டில் காணலாம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது, “5G சகாப்தத்தில், உலோகத்தின் வலிமை, நுட்பம் மற்றும் நீடித்த தரம் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள் சொல்கிறோம்… ஒருபோதும் செட்டில் ஆகாதீர்கள்.

OnePlus வெளியிட்ட டீசரில், Nord சாதனம் வெள்ளி நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, இது வரவிருக்கும் Nord சாதனம் உலோக வடிவமைப்புடன் வெளியிடப்படலாம் என்பதைக் குறிக்கிறது. நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த வரவிருக்கும் Nord சாதனம் OnePlus Nord 4 என்று வதந்திகள் கூறுகின்றன. இது தவிர, நிறுவனம் இந்த போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ மற்றும் OnePlus Watch 2R. ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம் என்ற தகவலும் வருகிறது.

OnePlus Nord 4: எதிர்ப்பர்க்கபடும் அம்சம்

சமீபத்தில் டிப்ஸ்டர் ஒருவர் தகவல் கொடுத்திருந்தார் இருப்பினும், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் கிளாஸ் யூனிபாடி வடிவமைப்புடன் வெளியிடப்படலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறது.

மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பேசினால் 6.74-இன்ச் OLEDடிஸ்ப்ளே உடன் 1.5K ரேசளுசன் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2150nits பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது மற்றும் இதில் Snapdragon 7+ Gen 3 chip. மற்றும் இதில் 5,500mAh பேட்டரியுடன் 100W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

மேலும் OnePlus Nord 4 யில் போட்டோக்ராபிக்கு ஒரு 50MP + 8MP கேமரா செட்டப் கொண்டிருக்கும் மற்றுமிதன் முபக்கத்தில் செல்பிக்கு 16MP கேமரா இருக்கும்

மற்ற கனெக்டிவிட்டி அம்சங்களை பற்றி பேசினால், OnePlus Nord 4 யில் இன்-ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உடன் இதில் டுயள் ஸ்பீக்கர் Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, IR blaster, x-axis linear motor, அலர்ட் slider, மற்றும் பல கிடைக்கும்.

இதையும் படிங்க: Samsung யின் அதன் போல்டபில் போனின் அனைத்து தகவலும் லீக்

OnePlus Nord 4: எதிர்ப்பர்க்கபடும் விலை

இதன் விலை பற்றி பேசினால், OnePlus Nord 4 யில் 31,999ரூபாயில் இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :