OnePlus-Nord-CE4
நீங்கள் OnePlus-யின் இந்த போனை வாங்க நினைத்தால், OnePlus Nord CE4 5G ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தற்போது, அமேசானில் OnePlus Nord CE4 5G-க்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கும் சலுகைகளில் விலை குறைப்பு, பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் ஆகியவை அடங்கும். OnePlus Nord CE4 5G-யில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க
OnePlus Nord CE4 5G இன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.22,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.24,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிச் சலுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.20,999 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் நீங்கள் ரூ.17,400 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, மாற்றாக வழங்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
OnePlus Nord CE4 5G ஆனது 1080×2412 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசர் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 யில் இயங்குகிறது. கனெக்சன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS, USB Type-C port மற்றும் NFC ஆகியவை அடங்கும். இந்த போனில் 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5500mAh பேட்டரி உள்ளது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Nord CE 4 இன் பின்புறம் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவையும், LED ஃபிளாஷ் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. டைமென்சன் பொறுத்தவரை, இந்த போன் 162.5 mm நீளம், 77.3 mm அகலம், 8.4 mm திக்னஸ் மற்றும் 186 கிராம் எடை கொண்டது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Samsung யின் இந்த புதிய போனில் அதிரடியாக ரூ,7,000 டிஸ்கவுண்ட்