OnePlus Nord CE 4 Lite போனில் 2000 வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்

OnePlus Nord CE 4 Lite போனில் 2000 வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

OnePlus சமீபத்தில் இந்தியாவில் அதன் குறைந்த விலை ஸ்மார்ட்போன் OnePlus Nord CE 4 Lite 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோனின் அதிகாரப்பூர்வ விலை ரூ. 19,999 முதல் தொடங்குகிறது,

இதன் விலை டிஸ்கவுன்ட் மற்றும் சிறப்பம்சம் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்

OnePlus சமீபத்தில் இந்தியாவில் அதன் மலிவான ஸ்மார்ட்போன் OnePlus Nord CE 4 Lite 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஃபோனின் அதிகாரப்பூர்வ விலை ரூ. 19,999 முதல் தொடங்குகிறது, ஆனால் நீங்கள் பிரைம் மெம்பர்ஷிப் பெற்றிருந்தால், இன்றும் இந்த போனை அதிக தள்ளுபடியுடன் வாங்க முடியும். கடந்த ஆண்டு வந்த Nord CE 3 Lite 5G உடன் ஒப்பிடும்போது புதிய OnePlus பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை டிஸ்கவுன்ட் மற்றும் சிறப்பம்சம் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்

OnePlus Nord CE 4 Lite 5G விலை மற்றும் ஆபர்

OnePlus Nord CE 4 Lite 5G இரண்டு வகைகளில் வாங்கலாம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.19,999. அதேசமயம், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடலின் விலை ரூ.22,999. oneplus வெப்சைட் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றிலிருந்து இந்த போனை வாங்கலாம்.

நீங்கள் ICICI பேங்க் மற்றும் OneCard கார்ட்ஹோல்டர்களாக இருந்தால், 1000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம், இது தவிர, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூப்பன் வடிவில் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் 128 ஜிபி மாறுபாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் போனின் விலையை ரூ.17999 ஆக குறைக்கிறது.

OnePlus Nord CE4 Lite சிறப்பம்சம்

OnePlus Nord CE4 Lite யில் 6.67 இன்ச் யின் Full HD+ OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதன் ரேசளுசன் 2400 × 1080 பிக்சல் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது இதில் 240Hz டச் செம்பளிங் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னாஸ் மற்றும் 1200 நிட்ஸ் வரையிலான க்ளோபல் க்ளோபல் மேக்சிமம் ப்ரைட்னாஸ் இருக்கிறது, மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 695 6nm 5G ப்ரோசெசர் உடன் Adreno 619 GPU கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB / 256GB UFS 2.2 சேமிப்பகம் உள்ளது, இதை microSD கார்டு வழியாக 1TB வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 இல் வேலை செய்கிறது. OnePlus இன் புதிய ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் f/1.8 துளை மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி Sony LYT-600 கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இரட்டை சிம் ஆதரவு, 3.5mm ஆடியோ ஜாக், 5G SA/ NSA, Wi-Fi 6, ப்ளூடூத் 5.2, GPS/GLONASS/Beidou மற்றும் USB Type C போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி IP54 மதிப்பீட்டுடன் வருகிறது, இது தூசி மற்றும் தெறிப்பிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, போனில் நீளம் 162.9, அகலம் 75.6, தடிமன் 8.1 mmமற்றும் எடை 191 கிராம்.

இதையும் படிங்க Realme யின் இந்த போனில் 4,000 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo