OnePlus Nord CE 3 Lite vs Redmi Note 12 5G 20000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் ?

OnePlus Nord CE 3 Lite vs Redmi Note 12 5G 20000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் ?
HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் குறைந்த விலை போனான OnePlus Nord CE 3 Lite ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Redmi Note 12 ஸ்மார்ட்போனும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் குறைந்த விலை போனான OnePlus Nord CE 3 Lite ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 6.72 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் அப்டேட்  வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த Redmi Note 12 ஸ்மார்ட்போனும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட் என்பதை விரிவாக பார்க்கலாம்.

OnePlus Nord CE 3 Lite vs Redmi Note எது பெஸ்ட்?

டிஸ்பிளே 

புதிய OnePlus Nord CE 3 Lite 5ஜி யில் பெரிய டிஸ்பிளே 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கொண்டுள்ளது  மேலும் இது IPS LCD  ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ  20:9  கொண்டுள்ளது.

Xiaomi Redmi Note 12 ஸ்மார்ட்போனில் 6.67 inches கொண்ட AMOLED  ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது இதன் பாடி ரேஷியோ 20.1:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது 

ஒன்பிளஸ் ஃபோனை விட சியோமியின் ஃபோன் ~ 85% ~ 84.1% சிறந்த ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

OnePlus Nord CE 3 Lite 5G யில் நமக்கு 6 GB RAM கிடைக்கிறது இது கெமர்களுக்கு மிகவும் பிடிக்கும் அதன் மறுபுறம்   Xiaomi Redmi Note 12 ஸ்மார்ட்போனில் 4GB ரேம் கிடைக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும்  ஸ்டோரேஜ் 128 GB இருக்கிறது மேலும்  இரு ஸ்மார்ட்போன்களிலும் மெமரி ஸ்லோடும்  கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா 

OnePlus Nord CE 3 Lite யின் இந்த போனில் 108 MP + 2 MP + 2 MP ட்ரிபிள் பின் கேமரா கொண்டுள்ளது  அதன் மறுபக்கத்தில் Xiaomi Redmi Note 12 48 MP + 8 MP + 2 MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது செல்பி கேமராவை பொறுத்தவரை OnePlus Nord CE 3 Lite 5G சிறந்தது  என்று சொல்வோம் OnePlus Nord CE 3 Lite 5G போனில்  16 MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே Xiaomi Redmi Note 12' யின் ஸ்மார்ட்போனில் 13 MP முன் கேமரா இருக்கிறது 

பேட்டரி 

பேட்டரி பற்றி பேசினால் OnePlus Nord CE 3 Lite 5000 mAh, Li-Po பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இது 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது,

அதுவே Xiaomi Redmi Note 12 போனில் 5000 mAh, Li-Po Battery கொண்டுள்ளது, மேலும் இதில் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

விலை 

OnePlus Nord CE 3 Lite ரூ.19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 Xiaomi Redmi Note 12 போனின் விலை 17,980 ரூபாயாக இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo