ஒன்பிளஸ் நிறுவனம் அதன் குறைந்த விலை போனான OnePlus Nord CE 3 Lite ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 6.72 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோனில் Snapdragon 695 5G ப்ரோசெசர் மற்றும் 16 GB வரை ரேம் ஆதரவு உள்ளது. OnePlus Nord CE 3 Lite இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது மற்றும் ஃபோனில் 5000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவு உள்ளது. போனின் விலை மற்றும் பிற அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி பேஸ்டல் லைம் மற்றும் க்ரோமேடிக் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 மூலம் இயங்கும் நார்ட் CE 3 லைட் 5ஜி இரண்டு மென்பொருள் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது