OnePlus Nord 4 இந்தியாவில் செவ்வாய் ஜூலை 16 அறிமுகம் செய்யப்பட்டது OnePlus யின் கோடைகால வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Nord சீரிஸ் போன் கடந்த ஆண்டு OnePlus Nord 3க்கு அடுத்ததாக வருகிறது. புதிய OnePlus ஸ்மார்ட்போனில் 1.5K ரேசளுசன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது மற்றும் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இதன் விலை மற்றும் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்க.
இந்தியாவில் OnePlus Nord 4 யின் ஆரம்ப விலை ரூ. 29,999 ஆக வைக்கப்பட்டுள்ளது, இதில் அடிப்படை 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் இந்த போன் வழங்கப்படுகிறது, இதன் விலை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.35,999. மெர்குரியல் சில்வர், ஒயாசிஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் மிட்நைட் ஷேடுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் புதிய போன் வாங்குவதற்கு கிடைக்கும். முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூலை 20 முதல் ஜூலை 30 வரை நடைபெறும் மற்றும் அதன் திறந்த விற்பனை ஆகஸ்ட் 2 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord 4 போனில் இது 6.74-இன்ச் 1.5K (1,240×2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 450ppi பிக்சல் டென்சிட்டி 20.1:9 ரெப்ராஸ் ரேட் , 93.50 சதவீதம் ஸ்க்ரீன் to பாடி ரேசியோ மற்றும் 120Hz வரை அப்டேட் வீத சப்போர்டை கொண்டுள்ளது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 SoC, 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் Adreno 732 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, டூயல் சிம் (நானோ) OnePlus Nord 4 ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14.1 இல் இயங்குகிறது. ஒன்பிளஸ் புதிய ஃபோனுக்கான நான்கு வருட மென்பொருள் அப்டேட்களையும் இரண்டு வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் உறுதியளிக்கிறது இது 256GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Nord 4 ஆனது TUV SUD ஃப்ளூன்சி 72 Month A ரேட்டிங்கை பெற்றுள்ளதாக OnePlus கூறுகிறது. கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் உள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ஃபோனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) சப்போர்டுடன்50 மெகாபிக்சல் Sony LYTIA சென்சார் மற்றும் 112 டிகிரி புலத்துடன் கூடிய 8 மெகாபிக்சல் சோனி அல்ட்ரா லென்ஸ் ஆகியவை அடங்கும். பரந்த-கோண லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ சேட்டுக்கு முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. கேமரா செட்டிங் 4K வீடியோக்களை வினாடிக்கு 30/60 பிரேம்கள் (fps) மற்றும் 1080p வீடியோக்களை 60fps யில் படமாக்கும் பவர் கொண்டது.
OnePlus Nord 4 கனெக்டிவிட்டி பற்றி பேசினால், இதில் 5G, 4G LTE, Wi-Fi 6, 5.4, GPS, GLONASS, BDS, Galileo, NFC, QZSS மற்றும் USB Type-C போர்ட். இது ஒரு எச்சரிக்கை ஸ்லைடரையும் உள்ளடக்கியது. இந்த கைபேசியானது ஃபேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது மற்றும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சத்தம் ரத்து செய்யும் ஆதரவுடன் உள்ளது. புதிய Nord ஃபோன் பல AI அம்சங்களுடன் வருகிறது, நீண்ட சந்திப்புகளை உடனடியாக டிரான்ஸ்கிரிப்ட் செய்வதற்கான AI ஆடியோ சுருக்கம், மின்னஞ்சல்களை சுருக்கமாக AI ஷோர்ட் நோட் ட்ரேன்ஸ்லேசன் AI டெக்ஸ்ட் ட்ரேன்ஸ்லேசன் மற்றும் சிறந்த கனேக்டிவிட்டியுடன் AI Linkboost அம்சம். கொண்டுள்ளது.
OnePlus யின் Nord 4 யில் 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்க வசதி கொண்டுள்ளது இதை தவி இந்த போன் 5,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது பேட்டரி அலகு 1,600 க்கும் மேற்பட்ட சார்ஜிங் சுழற்சிகளுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் OnePlus இன் இன்-ஹவுஸ் பேட்டரி ஹெல்த் எஞ்சின் தொழில்நுட்பம் உள்ளது, இது AI இன் உதவியுடன் பேட்டரி பயன்பாடு மற்றும் சார்ஜிங் பழக்கத்தை உணர்ந்து, ஃபோன் 80 சதவிகிதம் சார்ஜ் ஆனதும் சார்ஜிங்கை மேம்படுத்துகிறது. வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது 28 நிமிடங்களில் 1 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. OnePlus Nord 4 162.6x75x8.0 mmமற்றும் 199.5 கிராம் எடை கொண்டது.
இதையும் படிங்க Samsung Galaxy Z Flip 6 ஸ்பெசல் Doraemon எடிசன் அறிமுகம் பாக்கவே சூப்பர் லுக்கில் இருக்கிறது