ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கும் தனது முதல் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் ஆர்.எஃப். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் குவால்காம் டெக்னாலஜீஸ் அரங்கில் ஒன்பிளஸ் 5ஜி கிளவுட் கேமிங்கின் எதிர்கால செட்டிங்கை செயல்படுத்தி காண்பித்தது. இதற்கு பயனர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கேம்பேட் மட்டும் இருந்தாலே போதுமானது. கிளவுட் பிராசசிங் மற்றும் 5ஜி செயல்பாடு மூலம் பயனர்கள் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும்.
லண்டனில் சீரான 5ஜி சேவையை வழங்கும் நோக்கில் இ.இ. நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள் மற்றும் ஆப்டிமைசேஷன்களை கொண்டு பயனர்கள் இதுவரை இல்லாத அளவு ஹெச்.டி. தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற முடியும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்க ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.