OnePlus அதன் முதல் போல்டப்பில் போன் அறிமுகம் செய்வத்த்திற்கு தயாராகியது.OnePlus அதன் போல்டப்பில் போனை MWC 2023 இல் அறிவித்தது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் போல்டப்பில் போனை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளது. ஒரு புதிய கசிவு OnePlus அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது, இருப்பினும் வெளியீட்டு தேதி இன்னும் மர்மமாக உள்ளது.
கூகுளின் போல்டப்பில் ஃபோன் பிக்சல் ஃபோல்ட் இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. OnePlus யின் முதல் போல்டப்பில் போன் Samsung, Oppo மற்றும் Motorola போன்ற நிறுவனங்களின் போல்டப்பில் போன்களுடன் போட்டியிடும்.
OnePlus யின் முதல் போல்டப்பில் போனில் Samsung Galaxy Z Fold 4 போன்ற 2K ரெஸலுசன் டிஸ்ப்ளே இடம்பெறலாம் ஒன்பிளஸின் போல்டப்பில் போன் ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு OnePlus V Fold மற்றும் OnePlus V Flip ஆகியவற்றின் வர்த்தக முத்திரைகள் வெளியிடப்பட்டன. OnePlus ஆனது OnePlus Nord N20 யின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பான OnePlus Nord N30 என்ற புதிய போனிலும் வேலை செய்கிறது. புதிய போன் கூகுள் ப்ளே-கன்சோலில் காணப்பட்டது.
OnePlus Nord N30, OnePlus Nord CE 3 Lite 5G ரீ ப்ராண்ட் வெர்சனாகும், இந்த புதிய போனில் முழு HD ப்ளஸ் டிஸ்பிளே உடன் வருகிறது இது 8GB ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 695 ப்ரோசெசர் கொண்டிருக்கும்.