ஒன்பிளஸ் 2019-இல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிட திட்டம்…!
ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த ஆண்டு வாக்கில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 அல்லது 7T ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு அமெரிக்காவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் முதல் ஆண்டாக அமைய இருக்கிறது. தற்சமயம் ஒன்பிளஸ் நிறுவனம் மே அல்லது ஜூன் மாத வாக்கில் வழக்கமான வேரியன்ட் ஒன்றையும், நவம்பர் மாத வாக்கில் T-வேரியன்ட் மாடலை வெளியிட்டு வருகிறது.
நெட்வொர்க் சப்போர்ட் முறை ஒன்பிளஸ் நிறுவனத்து சாதகமாக இருக்கும், இதனால் அமெரிக்க பயனர்களுக்கு வாங்கும் முன் பயன்படுத்த அதிக நேரம் வழங்கும். சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஐரோப்பிய நெட்வொர்க் வசதியுடன் வழங்க துவங்கியுள்ளது.
முதல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், எந்த நெட்வொர்க் உடன் இணைய இருக்கிறது என்பது குறித்த எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் ஏடி&டி மற்றும் டி மொபைல் நெட்வொர்க்களில் வழங்கப்படுகிறது.
எனினும் குவால்காம் சிப்செட்களை கொண்டு எவ்வித அமெரிக்க நெட்வொர்க்களுடன் இயங்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட முடியும். ஸ்மார்ட்போனின் வேகம் குறித்த கேள்விக்கு, “ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சாராம்சமாக சீராக இயங்கும் அதிவேக அனுபவம் வழங்குவது தான்” என பீட் லௌ தெரிவித்தார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile