ஸ்மார்ட்போன் ப்ரண்டான OnePlus அதன் OnePlus Ace 2 யின் புதிய ஸ்பெஷல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் புதிய Lava Red கலரில் அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 16 GB ரேம் வேரியண்ட் உடன் வருகிறது..
இந்த போன் தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜின் விலை 3,499 யுவான் (சுமார் ரூ. 41,700). வேகன் லெதர் பேக் பேனல் ஸ்டைலான தோற்றத்துடன் போனுடன் கிடைக்கிறது. லாவா ரெட் கலர் ஆப்ஷனில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் OnePlus 11R என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போனின் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இதில் 6.74 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ரெசல்யூசன் 2772×1240 பிக்சலாக இருக்கிறது மற்றும் இதில் 120 ஹாட்ஸ் ரெப்பிரஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த டிஸ்பிளே உடன் 1,450 நிட்ஸ் பிரைட்னஸ் 100 சதவிகிதம் DCI-P3 கலர் கமன்ட் கிடைக்கிறது மேலும் இந்த போனில் 4nm கொண்ட குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 8+ ஜென் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது .இந்த போனில் 16GB ரேம் மற்றும் 512 ஸ்டோரேஜ் கிடைக்கிறது இதனுடன் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ் ColorOS 13 வேலை செய்கிறது.
போனின் கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இந்த போனில் ட்ரிப்பில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பிரைமரி கேமரா 50 மெகாபிக்ஸல், செக்கண்ட்ரீ கேமரா 8மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் மற்றும் 2மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, போனின் செல்பி கேமரா பற்றி பேசுகையில் 16 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் ப்ளூடூத் 5.2, wifi 6 GBS மற்றும் NFC உடன் USB டைப் C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.