OnePlus Ace 2 Pro போன் 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் .

OnePlus Ace 2 Pro போன் 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் .
HIGHLIGHTS

OnePlus Ace 2 Pro வில் OnePlus செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு புதிய லீக் OnePlus Ace 2 Pro தொடர்பான முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

போனின் லான்ச் டைம்லைனுடன், டிஸ்பிளே ஸ்பெசிபிகேஷன்கள் வெளியாகியுள்ளன.

OnePlus Ace 2 Pro வில் OnePlus செயல்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ஒரு புதிய லீக் OnePlus Ace 2 Pro தொடர்பான முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதில், போனின் லான்ச் டைம்லைனுடன், டிஸ்பிளே ஸ்பெசிபிகேஷன்கள் வெளியாகியுள்ளன. OnePlus Ace 2 Pro வின் ஸ்பெசிபிகேஷன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

OnePlus Ace 2 Pro யில் டிஸ்பிளே இவ்வாறு இருக்கும்
சமீபத்திய லீக் நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷனிலிருந்து வந்துள்ளது, இது சீன மைக்ரோ பிளாக்கிங் வெப்சைட்டான வெய்போவில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. Oneplus ஸ்மார்ட்போனின் வெளியீட்டு டைம்லைன் டிப்ஸ்டர் வெளிப்படுத்தியுள்ளார், இது இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் வெளியிடப்படும். இது தவிர, பிராண்டின் இந்த நடவடிக்கை போனை Xiaomi Redmi K60 Ultra மாடலுடன் போட்டியிட வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கம்பெனி இந்த ஆண்டு பிப்ரவரியில் OnePlus Ace 2 அறிமுகப்படுத்தியது, இப்போது கம்பெனி OnePlus Ace 2 Pro கொண்டுவருகிறது. இது தவிர, Ace 2 Pro ஆனது 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளேவைப் பெறும், இது 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரிபெரேஸ் ரெட்டை கொண்டிருக்கும் என்று டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளிப்படுத்தியது. இந்த டிஸ்பிளேயில் கவர்ட் அஸெஜ்கள் மற்றும் மெலிதான பெசல்கள் இருக்கும். இந்த ஸ்கிரீன் BOE ஆல் வழங்கப்படும். இந்த டிஸ்பிளே Oppo Reno 10 Pro+ மாடலில் வழங்கப்படும் டிஸ்பிளே போன்றே இருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறோம். இது தவிர, 1440Hz PWM டிம்மிங் இருக்கும்.

முந்தைய ரிப்போர்ட்களின்படி, போன் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC யின் ஓவர்லாக் செய்யப்பட்ட வெர்சனில் இயக்கப்படும். ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் இந்த போனில் கிடைக்கும். கேமரா செட்டப்பை பற்றி பேசுகையில், OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கிடைக்கும். பேட்டரி பேக்கப்பைப் பொறுத்தவரை, இந்த போனில் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி வழங்கப்படும்.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo