ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டனில் மே மாதம் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
வெளியீட்டு தேதியுடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் ஒன்றையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா மற்றும் அலெர்ட் ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
போட்டோக்கள் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 OIS, 8 எம்.பி. 3X சூம், 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ராப் சார்ஜ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் 7 ப்ரோ / 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 3120×2232 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.
ஒன்பிளஸ் 7 மாடலில் 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, 3700Mah பேட்டரி, 20 வாட் டேஷ் சார்ஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.