இந்தியாவில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்ப்ளேவாகும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் முற்றிலும் பெசல் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இது ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் ஃபிளாக்ஷிப் தோற்றத்தை வழங்குகிறது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 4 ஜி எல்.டி.இ., வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். இயங்குதளம் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமரா கொண்டு அறிமுகமாகும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.