OnePlus 6Tஇண்டிஸ்ப்லே பிங்காரப்ரின்ட் சென்சாருடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது
புதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்
ரஷ்யாவின் சான்று அளிக்கும் வெப்சைட்டில் வெளியானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் போட்டோ சீன வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது.
புதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதேபோன்ற அம்சங்கள் ஒப்போ ஆர்17 / ஆர்17 ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்டைப்பெட்டியின் பக்கவாட்டு மற்றும் உள்புறங்களில் "Unlock The Speed" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பிரான்டிங் மற்றும் "6" எண் வெளிப்புறம் அச்சிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6T மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 256 ஜிபி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒப்போ ஆர்17 போன்று பின்புறம் டூயல் கேமராக்களை வழங்குமா அல்லது ஆர்17 ப்ரோ மாடலை போன்று மூன்று கேமரா வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஒன்பிளஸ் 6 மாடல் 3300 Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், ஒன்பிளஸ் 6T மாடலில் 3700 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile