ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் கொண்டு நிறைய தகவல் வெளியாகியுள்ளது அதாவது இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. என்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில், ஒன்பிளஸ் 6T ஸ்மாரட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. கீக்பென்ச் வெப்சைட்டின் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.
இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340×1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருக்கிறது.
போட்டோக்கள் எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படுகிறது.
இத்துடன் முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.