HIGHLIGHTS
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டது.
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு ஃபிரேம் மட்டும் டீசர் புகைப்படத்தில் காட்சியளிக்கிறது. புதிய ஒன்பிளஸ் 6 முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு ஸ்மார்ட்போன்களும் ஒரே அளவு கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் ராப்-அரவுண்டு டிசைன் கொண்டிருந்த நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் புதிய ஆன்டெனா இடம்பெற்றிருப்பது தெரியந்துள்ளது. இதன் சிம் ஸ்லாட் மற்றும் வால்யூம் ராக்கர்கள் ஸ்மார்ட்போனின் இடது புறமாக வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான புகைப்படங்களை போன்றே மூன்றடுக்கு ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
இத்துடன் டூயல் கேமரா வடிவமைப்பு, பின்புற கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மற்ற தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.