ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் புது தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் லீக் ஆகியிருக்கும் ஒன்பிளஸ் 6 புகைப்படங்கள் ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யும் வகையில் காட்சியளிக்கிறது.
இத்துடன் புதிய ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் எடிஷன் லண்டனில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தள டொமைன் பெயர் ஒன்பிளஸ்.நெட் இல் இருந்து ஒன்பிளஸ்.காம் என மாற்றப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 6 புதிய புகைப்படம் வெய்போ தளத்தின் மூலம் கசிந்திருக்கிறது.
ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், முன்பக்கம் நாட்ச், கீழ்புறம் மெல்லிய பெசல் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் எடிஷன் வெளியாக இருப்பதை தெரிவித்திருந்தது.
அவென்ஜர்ஸ் எடிஷன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது திரைப்படத்தின் விளம்பர திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது.