OnePlus 6 Marvel Avengers Limited Edition அதன் அம்சங்கள் லீக் ஆனது
OnePlus 6 A Kevlar மாதிரி கொண்டு வரும் அவென்ஜர்ஸ் லோகோவுடன் மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிசன் ஒரு பெரிய பாக்ஸில் இருந்தது , இந்த சாதனம் இந்த மாத இறுதியில் அமேசான் இந்தியாவுக்கு விற்பனைக்கு வர போகிறது .
ஒன்பிளஸ் 6 இந்தியாவில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் மே 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் சார்பில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 6 சீன வலைத்தளமான TENAA சான்று பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனின் புகைப்படம் கிடைக்காத போதும் சிறப்பம்சங்கள் முழுமையாக பட்டியிலிடப்பட்டுள்ளன.
சீன தளத்தில் இடம்பெற்றிருக்கும் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கிறது. இத்துடன் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க டேஷ் சார்ஜ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுகின்றன.
ஒன்பிளஸ் 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, 1/2.6″ சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல்
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
– 3300 எம்ஏஹெச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மே 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் தெரியவரும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile