நீங்கள் OnePlus யின் அதன் ப்ளாக்ஷிப் போனுக்கு எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இன்று அந்த எதிர்ர்ப்பர்க்கலம், OnePlus 13 உலகளவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, இருப்பினும் சீனாவில் இந்த போனை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது அந்த வகையில் இந்திய நேரப்படி இந்த போன் இன்று இரவு அதன் OnePlus 13 மற்றும் OnePlus 13R போனை அறிமுகம் செய்யும் மேலும் இதன் முழு தகவல்களை பார்க்கலாம் வாங்க.
OnePlus யின் இந்த விண்டர் நிகழ்வு ஜனவரி,7 2025 ஆன இன்று இரவு 9:00 மணிக்கு நடைபெறும், மேலும் இந்த நிகழ்வை உலகெங்கிலும் உள்ள கஸ்டமர்கள் இதை லைவாக பார்க்கலாம், நிறுவனத்தின் இந்த நிகழ்வை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் உடன் youtube சேனலிலும் பார்க்கலாம், மேலும் நீங்கள் முதல் ஆளாக ஒன்ப்ளஸ் போனின் லைவ் நிகழ்வு பார்க்க விரும்பினால் நீங்கள் இங்கு லைவ் ஸ்ட்ரீமிங் ரிமைன்டர் செட் செய்து கொள்ளுங்கள்.
OnePlus 13 ஆனது 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும். Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் போனில் கிடைக்கும். கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், OnePlus 13 இன் பின்புறம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டிருக்கும். இது தவிர, தொலைபேசியில் 6,000mAh பேட்டரி வழங்கப்படலாம், இது 100W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும்.
OnePlus 13 வரிசையில் OnePlus 13R ஆனது பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாக இருக்கும் . அதன் முந்தைய மாடலின் கர்வ்ட் டிஸ்பிளேவுடன் ஒப்பிடும்போது இதன் டிசைன் மிகவும் ப்ளாட்டாக இருக்கும். Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும். கேமரா செட்டிங் பொறுத்தவரை, இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சென்சாரின் ரேசளுசன் OnePlus 13 ஐ விட குறைவாக இருக்கும். OnePlus 13R 6,000mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம்.
இதையும் படிங்க Samsung Galaxy S25 சீரிஸ் அறிமுக தேதி வெளியானது, இந்த நிகழ்வில் அறிமுகமாகும்