இந்த நாட்களில் OnePlus 12 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி பேசினால். போன் குறித்த வதந்திகளும், லீக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த போன் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் அதன் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிகுறியையும் கொடுக்கவில்லை. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, போனின் சிறப்பம்சங்கள் மீண்டும் ஒருமுறை லீக் கொடுத்துள்ளது இந்த அப்டேட் அதன் கேமராவைப் பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்டுவருகிறது.
ஒன்ப்ளஸ் 12 சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸின் அடுத்த முதன்மை ஸ்மார்ட்போனாக இருக்கும். இது டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. இப்போது நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் நிலையம் ஒன்ப்ளஸ் 12 யின் சிறப்ப்ம்சசங்கள் குறித்து ஒரு பெரிய வெளிப்பாட்டை செய்துள்ளது. டிப்ஸ்டர் போனின் கேமரா செட்டிங்கை பற்றி பல விவரங்களைக் கொடுத்துள்ளார். முதலில் பின்புறம் பற்றி பேசினால், 50MP Sony IMX966 சென்சார் இதில் காணப்படுகிறது. இது OIS சப்போர்ட் கேமராவாக இருக்கும். இந்த சென்சார் நிறுவனத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை. இதில் 1/1.4 இன்ச் லென்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
கேமரா 23mm போக்கல் இது f/1.7 அப்ரட்ஜர் கொண்டதாக கூறப்படுகிறது. ப்ரைமர் கேமராவிற்குப் பிறகு, இரண்டாவது கேமரா 48MP அல்ட்ராவைட் சென்சார் என்று கூறப்படுகிறது. டிப்ஸ்டர் 1/2 இன்ச் சென்சார் பற்றி பேசியுள்ளார். இது 14 மிமீ குவிய நீளம் மற்றும் f/2.2 அப்ரட்ஜர் உடன் வரும். செட்டிங்கில் உள்ள மூன்றாவது கேமரா 64MP டெலிஃபோட்டோ கேமராவாக இருக்கலாம். இது OIS உடன் வரும். இதில் 1/2-இன்ச் சென்சார் இருக்கும். இது 70 மிமீ குவிய நீளம் கொண்டதாகவும், அபரட்ஜர் f/2.5 என்றும் கூறப்படுகிறது. இதில் 3X ஆப்டிகல் ஜூம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Airtel ஒரு ரீச்சர்ஜில் 4 சிம்மில் பல நன்மை கிடைக்கும்
ஒன்ப்ளஸ் 12 கேமரா Hasselblad ஆப்டிமைசெசன் இது தவிர, இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த போன் 6.7 இன்ச் 2K AMOLED LTPO டிஸ்ப்ளேவுடன் வரலாம். இது 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். சாதனத்தில் Qualcomm யின் வரவிருக்கும் ப்ரோசெசர் Snapdragon 8 Gen 3 என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன் 24ஜிபி ரேம் உடன் 1TB சேமிப்பகத்தை ஆதரிக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன்ப்ளஸ் 12 ஃபோன் 5,400mAh பேட்டரி மற்றும் 100W வேகமாக சார்ஜிங்குடன் வரலாம்.