OnePlus 12R இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது 1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்

Updated on 13-Feb-2024
HIGHLIGHTS

OnePlus 12 சீரிஸை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

OnePlus 12R யின் இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு லைவுக்கு வருகிறது.

, இந்த OnePlus போனை ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான Amazon இலிருந்து வாங்கலாம்.

OnePlus நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக OnePlus 12 சீரிஸை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் நிறுவனம் OnePlus 12 மற்றும் OnePlus 12R ஐ அறிமுகப்படுத்தியது. இந்த சீரிச்ல் OnePlus 12R யின் முதல் விற்பனை பிப்ரவரி 6 அன்று இருந்தது அதனை தொடர்ந்து இது முதல் விற்பனையில் அதிகபட்ச விற்பனையானதால் OnePlus 12R யின் இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு லைவுக்கு வருகிறது. நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால், இந்த OnePlus போனை ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான Amazon இலிருந்து வாங்கலாம்.

OnePlus 12R விற்பனை மற்றும் ஆபர்

OnePlus 12R நிறுவனம் ரூ.39,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை ரூ.45999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மதியம் 12 மணிக்கு நடைபெறும் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் இந்த போனை ரூ.38,999க்கு வாங்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஒன்கார்டு பேங்க் மூலம் ஃபோனில் ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம்.

இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 4000 ரூபாய் வரையிலான டிசகவுன்ட் வழங்கப்படுகிறது

12R சிறப்பம்சம்

OnePlus 12R ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2780 x 1264 பிக்சல் ரேசளுசன் உடன் இதில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், HDR10+ சப்போர்ட் செய்கிறது, இதன் அதிகபட்ச ப்ரைட்னஸ் 4500 nits ஆகும். போனின் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 செக்யூரிட்டி மற்றும் LTPO 4.0 உடன் வருகிறது.

OnePlus 12R யின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் வழங்கப்படுகிறது இது கடந்த ஆண்டு Qualcomm யின் அசத்தலான பர்போமான்ஸ் ஆகும், ரேம் மற்றும் ச்டோரேஜை பற்றி பேசுகையில், இந்த போன் 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 4.0 சேமிப்பகத்துடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

OnePlus 12R யில் மூன்று பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனின் ப்ரைமரி கேமரா சோனியின் IMX890 50MP லென்ஸ் ஆகும். இதனுடன் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் செல்பிக்கு 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க Poco X6 5G யின் புதிய வேரியண்டில் அதிரடியாக ரூ,3000 தள்ளுபடி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5500mAh பேட்டரி வழங்கப்படுகிறது இது 100W SUPERVOOC சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர் நிறுவனம் 26 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிவிடும் என கூறப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :