OnePlus 12R ஜனவரி 23 அறிமுகமாகும், இதன் First Look வெளியானது

OnePlus 12R ஜனவரி 23 அறிமுகமாகும், இதன் First Look வெளியானது
HIGHLIGHTS

OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன் உலகளாவிய வேரியன்ட் OnePlus 12R என்ற பெயருடன் வரும்

திய போனில் க்ளோபல் வேரியன்ட் பற்றிய தகவலை ஒரு டிப்ஸ்டர் அளித்துள்ளார்.

OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் உலகளாவிய வேரியன்ட் OnePlus 12R என்ற பெயருடன் வரும், அதன் வெளியீடு இன்னும் ஜனவரி 23 அன்று இருக்கும். இன்று, ஒரு டீஸர் வீடியோ ஒன்பிளஸ் ஏஸ் 3 யின் டிசைன் மற்றும் சேன்ட் கோல்ட் கலர் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கலர் விருப்பம் சீனாவில் கிடைக்கும். க்ளோபல் வேரியண்டின் கலரில் வழங்கப்படும் என்பது குறித்து ஒன்பிளஸ் அமைதியாக உள்ளது. இருப்பினும், புதிய போனில் க்ளோபல் வேரியன்ட் பற்றிய தகவலை ஒரு டிப்ஸ்டர் அளித்துள்ளார்.

OnePlus 12R லீக் தகவல்

சோசியல் மீடியா தளமான ‘X’யில் ஒரு போஸ்ட்டில் டிப்ஸ்டர் இஷான் அகர்வால் ஒன்பிளஸ் 12R யின் க்ளோபல் வேரியண்டின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கொண்டு வரப்படும் என்பதை இது காட்டுகிறது. தற்போதைய நிலவரப்படி, OnePlus 12R ஆனது OnePlus Ace 3 யில் உள்ள அதே சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

அதன்படி, புதிய OnePlus ஆனது 6.78-இன்ச் வளைந்த விளிம்பில் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், இது 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. செக்யுரிட்டிகாக, இந்த போனில் இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்படலாம். இந்த போன் ColorOS 14 லேயருடன் Android 14 OS யில் இயங்க முடியும்.

இதையும் படிங்க: Redmi Note 13 Pro+ டீசர் வெளியாகியுள்ளது, ஜனவரி 4 இந்தியாவில் அறிமுகமாகும்

இந்த போனில் Qualcomm யின் Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் கொடுக்கலாம். ரேம் 12 முதல் 16 ஜிபி வரை இருக்கலாம். 100 வாட் சார்ஜிங் மற்றும் 5 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது. செல்ஃபிக்காக இந்த போனில் 16 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஜனவரி 23 அன்று இந்தியாவில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய உள்ளது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இதில் அறிமுகப்படுத்தப்படும். ஒன்பிளஸ் பிரியர்கள் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்க, சமூக டிக்கெட்டுகள் ஜனவரி 3 முதல் விற்கப்படும். நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் PayTM Insider மற்றும் OnePlus.in இல் முன்பதிவு செய்யலாம். ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் 50 சதவீத தள்ளுபடியில் டிக்கெட் பெற முடியும். டிக்கெட் விலை மற்றும் வகைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo