OnePlus 12R ஸ்மார்ட்போன் டாப் 5 அம்சங்கள் பாருங்க

Updated on 22-Mar-2024
HIGHLIGHTS

OnePlus சமிபத்தில் இந்தியாவில் அதன் OnePlus 12R வரிசையில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது,

புதிய OnePlus 12R ஆனது 8GB + 256GB வேரியண்டை கொண்டுள்ளது

OnePlus 12R இன் புதிய 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.42,999. ஆகும்

OnePlus சமிபத்தில் இந்தியாவில் அதன் OnePlus 12R வரிசையில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதிக விலை இல்லாமல் அதிக சேமிப்பிடத்தை விரும்பும் பயனர்களை குறிவைக்கிறது. புதிய OnePlus 12R ஆனது 8GB + 256GB வேரியண்டை கொண்டுள்ளது, இது 8GB + 128GB வேரியன்ட் மற்றும் 16GB + 256GB வேரியண்டிர்க்கு இடையில் சரியாகப் பொருந்துகிறது. இது வாங்குபவர்களுக்கு நடுத்தர வகை விருப்பத்தை வழங்குகிறது.

OnePlus 12R விலை மற்றும் ஆபர் தகவல்.

OnePlus 12R இன் புதிய 8GB + 256GB வேரியண்டின் விலை ரூ.42,999. புதிய ஸ்டோரேஜ் வேரியன்ட் ஒன்பிளஸ் வெப்சைட் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் பிற ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் வாங்குபவர்களை கவரும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது.

OnePlus 12R Genshin Impact Edition Gift Box

ICICI பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் ஒன்கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம். பழைய சாதனத்தை மாற்றினால் ரூ. 3,000 போனஸாகப் பெறலாம் மற்றும் OnePlus Nord உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 கூடுதல் தள்ளுபடி சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள், வாங்குபவர்கள் OnePlus Buds Z2 யின் இலவச pair பெறுவார்கள்.

கூடுதலாக, ஒன்பிளஸ் 9 மாத செலவு இல்லாத EMI விருப்பத்தை வழங்குகிறது மற்றும் ஜியோ நன்மைகளை வழங்குகிறது, இதில் மாதம் ஒன்றுக்கு ரூ.150 தள்ளுபடி, 15 மாதங்களுக்கு, மொத்தம் ரூ.2,250 சேமிக்கலாம்.

OnePlus 12R டாப் 5 சிறப்பம்சம்

OnePlus 12R டிஸ்ப்ளே

OnePlus 12R ஆனது கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் 6.78-இன்ச் வளைந்த விளிம்பு AMOLED டிஸ்ப்ளே, 1.5K பிக்சல்கள் தீர்மானம், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 4,500 nits வரை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஒப்பரேட்டிங் சிஸ்டம்

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 1 யில் வேலை செய்கிறது. மூன்று ஆண்ட்ராய்டு OS அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை நிறுவனம் உறுதியளிக்கிறது.

OnePlus 12R

ப்ரோசெசர்

OnePlus 12R ஆனது Snapdragon 8 Gen 2 சிப் கொண்டுள்ளது. இது LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா செட்டிங் பற்றி பேசினால் அதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

மற்ற அம்சங்களில் இரட்டை ஸ்பீக்கர்கள், ஒரு IR பிளாஸ்டர், NFC மற்றும் IP65-ரேட்டட் சேஸ் ஆகியவை அடங்கும். இது 100W சார்ஜிங்கை சப்போர்ட் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

இதையும் படிங்க Vi கஸ்டமர்களுக்கு மிக சிறந்த ஆபர் eSIM வீட்டில் இருந்தபடி பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :