OnePlus 12 இன்று அறிமுகமாகும் இந்த லைவ் நிகழ்வை எப்படி பார்ப்பது

Updated on 23-Jan-2024
HIGHLIGHTS

OnePlus launch event'Smooth Beyond Belief'இன்று நடைபெற இருக்கிறது

இன்று OnePlus அதன் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது

OnePlus 12R. இது ஒன்பிளஸின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வாக இருக்கும்

OnePlus launch event’Smooth Beyond Belief’இன்று நடைபெற இருக்கிறது இன்று OnePlus அதன் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்று OnePlus 12 மற்றும் மற்றொன்று OnePlus 12R. இது ஒன்பிளஸின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வாக இருக்கும். இதன் வெளியீட்டு விழா ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது எத்தனை மணிக்கு நடைபெறும் மற்றும் ஒரு சில தகவலை பற்றி பார்க்கலாம்.

எப்பொழுது எங்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது ?

OnePlus யின் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 23 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது, அதே நேரத்தில் என்ட்ரி லைவ் ஸ்ட்ரீமிங் மாலை 5:30 மணிக்கு தொடங்கும். ஒன்பிளஸ் பட்ஸ் 3ம் இதில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் என்ன என்ன அறிமுகமாகும்

Oneplus 12

OnePlus இன் இந்த வெளியீட்டு நிகழ்வின் ஹீரோ தயாரிப்பு OnePlus 12 ஆனது Snapdragon 8 Gen 3 உடன் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போன் முந்தைய ஜெனறேசனை விட ஒரு பெரிய அப்க்ரேட் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 4வது ஜெனரல் ஹாசல்பிளாட் கேமரா செட்டிங் 5500mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை வழங்கும். சாதனம் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் இதில் 2K ரெசளுசனுடன் கூடிய ப்ரைட்னஸ் AMOLED ஸ்க்ரீன்களில் ஒன்றை உள்ளடக்கியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. OnePlus 12 நான்கு வருட முக்கிய சாப்ட்வேர் அப்டேட்களை பெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

OnePlus 12R

நிறுவனத்தின் இந்த மாடலில் Snapdragon 8 Gen 2 பொருத்தப்பட்டிருக்கும். OnePlus 12 ஐப் போலவே, இந்த ஃபோனும் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் மெட்டல் பிரேமுடன் சட்டத்துடன் உருவாக்க தரத்தில் சில அப்டேட்களை பெற்றுள்ளது.

OnePlus Buds 3

ஸ்மார்ட்போன்கள் தவிர, நிறுவனம் இன்றைய நிகழ்வில் OnePlus Buds 3 வெளியிட உள்ளது. முந்தைய ஜெனறேசனுடன் ஒப்பிடும்போது இந்த இயர்பட்கள் சிறந்த ஆடியோ தரம் மற்றும் சத்தம் ரத்து செய்யும் ப்ரோசெசர்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த வாரம் upcoming மற்றும் புதிய போன்களை பாக்கலாம் வாங்க

இந்த லைவ் எங்கிருந்து பார்ப்பது?

OnePlus இன் வெளியீட்டு நிகழ்வை பல சேனல்களில் காணலாம். மேலும், இந்த நிகழ்வின் பிரத்யேக டிக்கெட்டுகளை PayTm Insider அல்லது OnePlus ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம். இந்த டிக்கெட்டின் விலை 799 ரூபாய். இது தவிர, X, YouTube போன்ற OnePlus சோசியல் மீடியா தளங்களில் லைவ் ஸ்ட்ரீமிங்கைக் காணலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :