OnePlus புதிய கலரில் ஸ்மார்ட்போன் அறிமுகம் சூப்பர் லுக் தருகிறது

OnePlus புதிய கலரில் ஸ்மார்ட்போன் அறிமுகம் சூப்பர் லுக் தருகிறது
HIGHLIGHTS

Oneplus அதன் OnePlus 12 ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய எடிசன் Glacier White கலர் ஆப்ஷனில் வருகிறது.

. OnePlus 12 யின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை OnePlus ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Oneplus அதன் OnePlus 12 ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எடிசன் Glacier White கலர் ஆப்ஷனில் வருகிறது. OnePlus 12 யின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை OnePlus ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…

OnePlus 12 யின் புதிய வேரியண்டின் விலை மற்றும் விற்பனை

OnePlus போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.64,999. போனின் விற்பனை ஜூன் 6, 2024 முதல் தொடங்கும். இ-காமர்ஸ் தளமான அமேசானிலிருந்து போனை வாங்கலாம். பேங்க் ஆஃபர் மூலம் போனை வாங்கினால் ரூ.3,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜூன் 20க்கு முன் போனை வாங்கினால், ரூ.2000 கூப்பனை அனுபவிக்க முடியும். நீங்கள் ரூ.12,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெற முடியும்.

இந்த போனஸ் டிராப்பை வாங்குபவர்கள் OnePlus 12 Glacial White உடன் இலவசப் பொருளாக OnePlus Duffel Bag (Silver Grey) கிடைக்கும், இருப்பினும் இது தற்பொழுது இது தற்போது குறைந்த அளவிலேயே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும் புதிய கலர் வேரியன்ட் தவிர சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை

OnePlus 12 அம்சங்கள்

OnePlus 12 போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.82 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ஹை ப்ரைட்னாஸ் 4500 நிட்கள். ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 8 Gen 3 SoC சிப்செட் போனில் வழங்கப்படும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்OS 14 சப்போர்டுடன் வரும். நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் போனில் கொடுக்கப்படும்.

மேலும், 5 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும். கேமராவைப் பற்றி பேசினால், போனில் 50MP Sony LYT 808 சென்சார் இருக்கும். மேலும், 64MP கேமரா மற்றும் 3x டெலிஃபோட்டோ சென்சார் வழங்கப்படும். இந்த போன் 48MP அல்ட்ரா வைட் கேமரா சென்சார் உடன் வரும். பவர் பேக்கப் பற்றி பேசினால், ஃபோனில் 5400mAh பேட்டரி வழங்கப்படும், இது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் உடன் வரும்.

இதையும் படிங்க: Realme 12 4G அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo