OnePlus 12 அறிமுகத்திற்க்கு முன்னே கலர் வேரியன்ட்ஸ் பல லீக் தகவல் வெளியானது

OnePlus 12 அறிமுகத்திற்க்கு முன்னே கலர் வேரியன்ட்ஸ் பல லீக் தகவல் வெளியானது
HIGHLIGHTS

OnePlus 12 அறிமுகப்படுத்தப்படுவதற்கு மிக அருகில் வந்துவிட்டது

சாத்தியமான வெளியீடு டிசம்பர் 4 ஆம் தேதி இருக்கும்

இந்த போன் மிகவும் தனித்துவமான கலர் வகைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

OnePlus 12 அறிமுகப்படுத்தப்படுவதற்கு மிக அருகில் வந்துவிட்டது இந்த நாட்களில் போன்கள் பற்றிய பேசினால். சாத்தியமான வெளியீடு டிசம்பர் 4 ஆம் தேதி இருக்கும் என்று கூறப்படுகிறது, இதற்கு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை. இந்த ஃபோன் பெரிய 6.82 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது, இது 2K ரேசளுசனுடன் வரும். மேலும், இது Qualcomm யின் சமீபத்திய ப்ரோசெச்ர் Snapdragon 8 Gen 3 உடன் பொருத்தப்பட்டிருக்கும். இப்போது போனின் நிற வகைகளும் அறிமுகத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. இந்த போன் மிகவும் தனித்துவமான கலர் வகைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

OnePlus 12 லீக் சிறப்பம்சம்.

ஒன்ப்ளஸ் 12 யின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை லீக்களில் நிறைய வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது போனின் நிற வேரியன்ட்கள் பற்றிய பெரிய தகவல்களும் வெளிவந்துள்ளன. ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் லீ ஜீ சமீபத்தில் இந்த போன் மூன்று நிறங்களில் வழங்கப்படும் என்று உறுதி செய்திருந்தார்.

இப்போது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது பதிவில் மூன்று நிற வகைகளையும் பற்றி கூறியுள்ளார். இந்த போன் Frost White, Cyan Green மற்றும் Obsidian Black விருப்பங்களில் வரும். நிறங்களின் சிறப்பு என்னவென்றால், அவை பயனர் விருப்பத்தேர்வுகள் மற்றும் தீம் அடிப்படையாகக் கொண்டவை. பனி வெள்ளை தூய்மையைக் குறிக்கிறது, சியான் பச்சை இயற்கையின் பரந்த தன்மையைக் குறிக்கிறது, மற்றும் அப்சிடியன் கருப்பு ஒரு தசாப்தத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது.

நிறுவனம் ஒன்பிளஸ் 12ஐ பிரீமியம் கிளாஸ் ஃபினிஷுடன் மூன்று வண்ண வகைகளுக்கும் வழங்கும்.ஒரு வேரியன்ட் வூட்க்ரீன் டெக்ச்ஜர் உடன் வரும் என பேச்சு வருகிறது, அது ஒரிஜினல் OnePlus One யின் ட் ரிப்யுட் செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்படும், நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இதை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதையும் படிங்க Email லிருந்து WhatsApp இயக்கலாம் எப்படி லிங்க் செய்வது பார்க்கலாம் வாங்க

ஒன்ப்ளஸ் 12-ன் டிசைனில் எந்தவித குறைப்பாடும் இல்லை. இது டிரிபிள் கேமராவுடன் வரும், அதில் ஹாசல்பிளாட் லோகோவும் இருக்கும். போன் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கப் போகிறது. சிறப்பம்சங்களை பார்த்தால், இதுவரை கிடைத்த தகவல்களின்படி, ஒன்ப்ளஸ் 12 6.82 இன்ச் 2K டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது BOE X1 OLED டிஸ்ப்ளே என்று கூறப்படுகிறது. இதில் 120Hz யின் ரெப்ராஸ் ரேட்டுடன் காணப் போகிறது. போனில் சமீபத்திய Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒன்ப்ளஸ் 12 ஆனது 16GB RAM மற்றும் 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படலாம். இது 5,400mAh பேட்டரி மற்றும் 100W சார்ஜிங்குடன் வரலாம். இது தவிர, 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டையும் இதில் வழங்கும் . இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 யில் இயங்கும். ஃபோனின் ப்ரைமரி கேமரா 64MP OmniVision OV64B பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவாக 3X ஆப்டிகல் ஜூம் கொண்டதாக இருக்கும். இதனுடன், 48 மெகாபிக்சல் IMX581 அல்ட்ராவைடு லென்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் கேமராவுடன் இந்த போன் வரலாம். இது பின்புறத்தில் LYT-T808 முதன்மை கேமரா சென்சாருடன் வரும் என்று கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo