சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus இந்தியாவில் OnePlus 12 சீரிஸ் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 உடன் நிறுவனத்தின் முதல் ப்ளாக்ஷிப்ஸ்மார்ட்போன் ஆகும். இது சோனி LYT-808 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இதனுடன், நிறுவனம் OnePlus 12R ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது OnePlus Ace 3 யின் ரீப்ரான்ட் வெர்சன் ஆகும் . இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 உள்ளது.
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 12 வேரியண்டின் விலை ரூ.64,999 மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்டின் விலை ரூ.69,999. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளோவி எமரால்டு மற்றும் சில்க்கி பிளாக் கலரில் கிடைக்கிறது. OnePlus 12R இன் 8 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை ரூ. 39,999 மற்றும் 16 ஜிபி + 256 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.45,999 ஆகும். இது கூல் ப்ளூ மற்றும் அயர்ன் கிரே நிறங்களில் வாங்கலாம்.
OnePlus 12 போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இந்த போனில் ,6.82 இன்ச் கர்வ்ட் HD+ (1,440 x 3,168 பிக்சல் யின் LTPO 4.0 AMOLED ஸ்க்ரீன் Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் ஹாசல்பிளாட் மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது சோனி LYT-808 சென்சார் மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதன் 5,400 mAh பேட்டரி 100 W SuperVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடி இந்த வாரம் OTT யில் வெளிவந்த Movie மற்றும் Web series பார்த்து மகிழலாம்
இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K (1,264×2,780 பிக்சல் LTPO 4.0 AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது இது 16 GB LPDDR5x ரேம் உடன் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 ப்ரோசெசரக உள்ளது. OnePlus 12R ஆனது Sony IMX890 சென்சார் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதன் 5,000 mAh பேட்டரி 100 W SuperVOOC வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த ஸ்மார்ட்போனின் அளவு 163.3 x 75.3 x 8.8 mm மற்றும் அதன் எடை தோராயமாக 207 கிராம் ஆகும்.