digit zero1 awards

OnePlus 12 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் வெளியானது ஜனவரி 23 அறிமுகமாகும்

OnePlus 12 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் வெளியானது ஜனவரி 23 அறிமுகமாகும்
HIGHLIGHTS

OnePlus 12 யின் உலகளாவிய அறிமுகம் மிக அருகில் வந்துவிட்டது .

OnePlus 12 சீரிஸ் க்ளோபல் சந்தையில் 23 ஜனவரி அறிமுகம் செய்யும்

OnePlus 12 ஐப் பொறுத்தவரை, இது புளூடூத் 5.4 உடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று லிஸ்ட் கூறுகிறது. Qualcomm Snapdragon 8 Gen 3 SoC உடன் வரும்

OnePlus 12 யின் உலகளாவிய அறிமுகம் மிக அருகில் வந்துவிட்டது . இந்த தொடர் ஜனவரி இறுதியில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிறுவனம் ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12ஆர் ஆகியவற்றை சீரிஸில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும். நிறுவனம் OnePlus 12 மற்றும் OnePlus Ace 3 ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. OnePlus 12R ஆனது OnePlus Ace 3 யின் ரீ ப்ரண்டேட் வெர்சனக அறிமுகப்படுத்தப்படும். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த ஸ்மார்ட்போன்கள் சர்டிபிகேசன் தளங்களில் காணப்பட்டன. சாதனங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

OnePlus 12 சீரிஸ் அறிமுக தேதி

OnePlus 12 சீரிஸ் க்ளோபல் சந்தையில் 23 ஜனவரி அறிமுகம் செய்யும் அறிமுகம் செய்யும் முன், இரண்டு போன்களின் சர்டிபிகேசன் தளங்களில் தோன்றின. மாடல் நம்பர் CPH2609 உடன் TDRA சான்றிதழில் OnePlus 12R காணப்பட்டது. Bluetooth SIG சான்றிதழில் OnePlus 12 காணப்பட்டது. இது மாடல் எண் CPH2583 உடன் தோன்றியது. OnePlus 12 ஐப் பொறுத்தவரை, இது புளூடூத் 5.4 உடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று லிஸ்ட் கூறுகிறது. Qualcomm Snapdragon 8 Gen 3 SoC உடன் இந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OnePlus 12R போனில் Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் உடன் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும். இந்த போனில் Snapdragon 8 Gen 2 சிப்செட் இருப்பதாக கூறப்படுகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வரப் போகிறது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.

கேமரா பற்றி பேசுகையில் இதன் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் Sony IMX890 சென்சார் ப்ரைமரி லென்ஸாக இருக்கும், இது OIS சப்போர்ட் கொண்டிருக்கும். இதனுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை டிரிபிள் கேமரா செட்டிங்கில் இருக்கும். செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமராவுடன் இந்த போன் வரவுள்ளது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 யில் இயங்கும். OnePlus 12 ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட் , Dolby Vision மற்றும் HDR10+ ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 6.82-இன்ச் LTPO AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் 50MP டிரிபிள் கேமரா செட்டிங் கொண்டுள்ளது. இது 5400mAh பேட்டரியுடன் வருகிறது, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

இதையும் படிங்க: Amazon Great Republic Day Sale ஜனவரி 13 ஆரம்பமாகும் பல ஆபர் டிஸ்கவுன்ட் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo