HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபில் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் போன் ஆகும்.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் எப்எம் ரேடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 90 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 457 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போனில் 2.7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.77 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5MP கேமரா, பிக்சட் போக்கஸ் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனில் குவாட் கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட், X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 150Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது.
நோக்கியா 2780 ப்ளிப் போன் 4ஜி அழைப்புகளுக்கான சப்போர்ட், ரியல் டைம் டெக்ஸ்டிங், வோல்ட்இ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512MB ரேம், கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட் எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட், வைபை, 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை கழற்றி மாற்றும் வசதி உள்ளது.