Nothing Phone 2a யின் Special Edition அறிமுகம் அப்படி என்ன ஸ்பெசல் பாருங்க

Nothing Phone 2a யின் Special Edition அறிமுகம் அப்படி என்ன ஸ்பெசல் பாருங்க
HIGHLIGHTS

Nothing அதன் Nothing Phone 2a யின் ஸ்பெசல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது,

இதன் ஒரிஜினல் மாடலை போல இது ட்ரேன்ஸ்பரென்ட் டிசைனில் இருக்கிறது

. Phone 2a ஸ்பெசல் எடிசன் ஜூன் 5 முதல் Flipkart மூலம் வாங்கலாம்

Nothing அதன் Nothing Phone 2a யின் ஸ்பெசல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது, இத ன் ஒரிஜினல் மாடலை போல இது ட்ரேன்ஸ்பரென்ட் டிசைனில் இருக்கிறது, ஆனால் பேக் பேனலின் உள்ளே சிகப்பு, மஞ்சள், மற்றும் நிலா கலரில் ஹைலட்டர்ஸ் இருக்கிறது, இந்த போன் பார்க்கும்போது தனித்துவமாக தெரியும் ஸ்பெசல் எடிசனின் மாடலின் மெயின் கலர் வைட் ஆகும், அதுவே கேமரா மாட்யுளின் நான்கு பக்கம் மற்றும் கீழ் பகுதியில் சில இடத்தில் க்ரே கலர் ஹைலைட்டர் இருக்கிறது, கேமரா மாட்யுல் ப்ளூ கலர் இருக்கிறது, அதுவே சில எலிமென்ட்ஸ் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

Nothing Phone 2a ஸ்பெசல் எடிசன் விலை மற்றும் விற்பனை

Nothing Phone 2a Special Edition யின் விலை பற்றி பேசினால், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.27,999. Phone 2a ஸ்பெசல் எடிசன் ஜூன் 5 முதல் Flipkart மூலம் வாங்கலாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கர்ட்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Nothing Phone 2a சிறப்பம்சம்

Nothing கூறியது என்னவென்றால், சிவப்பு, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய மூன்று கலர் ஒரே போனில் காட்டப்படுவது இதுவே முதல் முறை. டூயல் சிம் (நானோ) நத்திங் ஃபோன் 2a ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 யில் இயங்குகிறது. இது மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி கனேக்சங்களை உறுதியளிக்கிறது, இது 6.7-இன்ச் முழு-HD+ (1,080×2,412 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 30Hz முதல் 120Hz வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீதம், 394ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த போனின் ஸ்க்ரீனில் HDR10+ சப்போர்ட் 240Hz டச் செம்பளிங் ரேட் 2160Hz PWM ப்ரீகுவன்ஷி மற்றும் 1,300 nits பீக் ப்ரைட்னஸ் இருக்கிறது Nothing Phone 2a யில் ஒகட்டா கோர் 4nm மீடியாடேக் Dimensity 7200 Pro SoC அடங்கியுள்ளது, இதில் 12GB வரையிலான ரேம் சேர்க்கப்பட்டுள்ளது.

Nothing Phone 2a யில் டுயள் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது அதில் மெயின் கேமரா 50-மேகபிக்சல் சென்சார் f/1.88 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, இதன் ஒப்டிகள் ஸ்டேப்லைசெசன் மற்றும் எலக்ட்ரோனிக் இமேஜ் ஸ்டேப்லைசெசன் சப்போர்ட் செய்கிறது செகண்டரி 50 மேகபிக்சல் அல்ட்ரா வைட் என்கில் சென்சார் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 114 டிகிரி பார்வைக் களத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 துளையுடன் கூடிய 16-மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் 2a யில் 256ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும், இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Wi-Fi 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, NFC, GPS, GLONASS, GALILEO, QZSS, 360-டிகிரி ஆண்டெனா மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது ஹை டெபிநேசன் மைக்ரோஃபோன் மற்றும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது IP54 தரப்படுத்தப்பட்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் பில்ட் கொண்டுள்ளது.

Phone 2a யில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது ஃபோன் 1ன் 4,500எம்ஏஎச் பேட்டரி யூனிட் மற்றும் ஃபோன் 2ன் 4,700எம்ஏஎச் பேட்டரி யூனிட்டுடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய மேம்படுத்தலாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால், பேட்டரி யூனிட் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. வேகமான சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 23 நிமிடங்களில் ஜீரோவிலிருந்து 50 சதவீதத்திற்கும், 59 நிமிடங்களில் 100 சதவிகிதத்திற்கும் பேட்டரியை சார்ஜ் செய்யும் என்று கூறப்படுகிறது. இதன் சைஸ் 161.74×76.32×8.55 mm மற்றும் 190 கிராம் எடையுடையது.

இதையும் படிங்க Motorola யின் இந்த போனின் தகவல் கீக்பெஞ்சில் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo