Nothing யின் அடுத்த போனை களத்தில் இறக்க தயார் செய்துள்ளது அறிமுக தேதி பாருங்க

Nothing யின் அடுத்த போனை களத்தில் இறக்க தயார் செய்துள்ளது அறிமுக தேதி பாருங்க
HIGHLIGHTS

Nothing அதன் அடுத்த ஸ்மார்ட்போன் Nothing Phone (2a) Plusஅறிமுகம் செய்வதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது

சோசியல் மீடியா தளமான X யில் ஒரு புதிய போஸ்ட்டின் மூலம் நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டு தேதியைத் தவிர, வேறு எந்த விவரங்களும் போஸ்ட்டில் ஜூலை 31 ஆம் தேதி Nothing யின் இந்த போனை அறிமுகம் செய்யும்

Nothing அதன் அடுத்த ஸ்மார்ட்போன் Nothing Phone (2a) Plusஅறிமுகம் செய்வதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சோசியல் மீடியா தளமான X யில் ஒரு புதிய போஸ்ட்டின் மூலம் நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதியைத் தவிர, வேறு எந்த விவரங்களும் போஸ்ட்டில் ஜூலை 31 ஆம் தேதி Nothing யின் இந்த போனை அறிமுகம் செய்யும். இது தவிர, ஒரு போட்டோவும் போஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது, இது phone (2a) பிளஸின் வெளிப்படையான பகுதியின் ஜூம்-இன் ஷாட் போல் தெரிகிறது.

இது தவிர, இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் “பிளஸ்” ஆக இருக்கும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும். கூடுதல்”, அதாவது முந்தைய ஜெனரேசன் விட வலுவான அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் முன்பை விட பெரிய டிஸ்ப்ளே மற்றும் ஒரு பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கலாம் என்பதை இது குறிக்கிறது. இருப்பினும், அம்சங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Nothing Phone (2a) Plus இதுவரை கிடைத்த தகவல்.

இந்த போனின் கிடைத்த தகவலின் படி இதன் பெயர் Phone (2a) Plus ஆகும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Phone (2a) ஸ்மார்ட்போன் யின் ப்ளஸ் வெர்சனக இருக்கும். வரவிருக்கும் கைபேசி ஏற்கனவே ஜியோவின் 5G ஆதரவு சாதனப் பக்கம் உட்பட பல இடங்களில் காணப்பட்டது. இது தவிர, UAE இன் TDRA சான்றிதழ் தளம் மற்றும் BIS சர்த்பிகட் தளத்திலும் Phone (2a) Plus காணப்பட்டது.

அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே மற்றும் பேட்டரியைத் தவிர்த்து ஃபோன் (2a) போன்ற டிசைனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள அம்சங்கள் மற்றும் சிசப்பம்சங்கள் முந்தைய போனை போலவே இருக்கலாம் அப்போ வாங்க Nothing Phone (2a) யின் சிறப்பம்சம் பற்றி பார்க்கலாம்.

Nothing Phone (2a) Specs

இந்த போனில் முழு HD+ ரேசளுசனுடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 10-பிட் கலர் HDR10+ மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டை ஆதரிக்கிறது. இந்தச் சாதனம் Android 14ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய NothingOS 2.6 யில் வேலை செய்கிறது.

போட்டோ எடுப்பதற்கு, இது 50MP ப்ரைம் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸுடன் வரும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது தவிர, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி முன்பக்க ஷூட்டரையும் வழங்குகிறது.

இது தவிர, இது MediaTek Dimensity 7200 Pro செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. போனை இயக்க, இது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45-வாட் வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க Honor 200 series ஸ்மார்ட்போன் AI portrait எஞ்சின் உடன் அறிமுகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo