Nothing Phone 2a Plus டிசைன் உட்பட பல தகவல் லீக்

Updated on 30-Jul-2024
HIGHLIGHTS

Nothing சமிபத்தில் Nothing Phone (2a) Plus போனை இந்தியாவில் ஜூலை 31 அன்று அறிமுகம் செய்யப்படும்

SmarPrix யின் புதிய ரிப்போர்ட்டின் படி ஸ்மார்ட்போன் யின் ஒரு போட்டோ லீக் ஆகியது

Nothing Phone (2a) Plus யின் லீக் ஆகிய போட்டோ மூலம் பார்த்தால் இதன் டிசைன் Phone (2a) போல இருக்கிறது

Nothing சமிபத்தில் Nothing Phone (2a) Plus போனை இந்தியாவில் ஜூலை 31 அன்று அறிமுகம் செய்யப்படும் என கூறியது. பிராண்ட் ஸ்மார்ட்போன் சிப்செட் மற்றும் பல சிறப்பம்சம் தகவல் வெளியாகியது, அனால் டிசைன் இதுவரை தகவல் வெளியிடாமல் இருந்தது, இருப்பினும் SmarPrix யின் புதிய ரிப்போர்ட்டின் படி ஸ்மார்ட்போன் யின் ஒரு போட்டோ லீக் ஆகியது. இதன் மூலம் பின்புற டிசைன் தகவல் வெளியாகியுள்ளது, இதன் மூலம் உங்களுக்கு Nothing Phone (2a) Plus பற்றி தகவல் தெரிந்து கொள்ளலாம்.

Nothing Phone (2a) Plus டிசைன்

Nothing Phone (2a) Plus யின் லீக் ஆகிய போட்டோ மூலம் பார்த்தால் இதன் டிசைன் Phone (2a) போல இருக்கிறது. மேலும் இந்த போன் சில்வர் மற்றும் கிரே டூயல்-டோன் ஃபினிஷ் மற்றும் வெர்டிக்கள் ஐலேண்ட் இரட்டை கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. கேமரா யூனிட்டைச் சுற்றியுள்ள சுற்று மாட்யுளுக்கு அருகில் மூன்று கிளிஃப் LED லைட்கள் உள்ளன. அதன் ரீடைளர் பாக்ஸ் டிசைன் போன்(2a) போன்றது என்றும் அறிக்கை கூறுகிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்மார்ட்போனின் பெயரில் பிளஸ் டெக்ஸ்ட் வித்தியாசம் உள்ளது.

Nothing Phone (2a) Plus சிறப்பம்சம்.

அறிக்கையின் படி Nothing Phone (2a) Plus யில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் FHD+ரேசளுசன் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,300 நித்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இந்த போனில் செக்யுரிட்டிக்காக இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது. டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50W வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி இருக்கும்.

கேமரா பற்றி பேசுகையில் Nothing Phone (2a) Plus யில் பின்புறத்தில் 50 மேகபிக்சளின் இரண்டு கேமரா இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இது 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டிருக்கலாம். ஃபோன் (2a) Plus ஆனது Dimensity 7350 Pro சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது LPDDR4x RAM மற்றும் UFS 2.2 சேமிப்பக விருப்பங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் இருக்கும்

இதையும் படிங்க: POCO F6 Deadpool Limited Edition இந்தியாவில் அறிமுகம், இதன் லுக் பாத்து மயங்கிருவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :