நத்திங் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் Nothing Phone 2a இந்தியாவில் உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது, சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் போன்ற வலுவான போட்டியாளர்களால் ஏற்கனவே நிரம்பியிருக்கும் மிட்ரேஞ் பிரிவை எடுத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட நிறுவனத்தின் முதல் முதன்மை இல்லாத ஸ்மார்ட்போன் இதுவாகும், இருப்பினும் இந்த போனின் டிசைனையும் சிப்செட்டையும் அறிமுகப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு நிறுவனம் பல தகவலை வெளியிட்டு இருந்தாலும் இப்போது இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய போனின் விலை மற்றும் டாப் 5 அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Nothing யின் இந்த போனை பற்றி பேசினால், இதன் 8GB + 128GB வேரியண்டின் விலை பற்றி பேசினால், 23,999ரூபாயில் வைக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், 8ஜிபி+256ஜிபி மற்றும் 12ஜிபி+256ஜிபி மாடல்கள் முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த போன் மார்ச் 12 முதல் Flipkart மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். முதல் விற்பனையின் போது அனைத்து சலுகைகளையும் சேர்த்து ரூ.19,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
நத்திங் யின் இந்த லேட்டஸ்ட் போனின் டிசைன் பற்றி பேசினால் பயனரின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கக்கூடிய நிறுவனத்தின் கையொப்ப கிளிஃப் இன்டர்பேஸ் உடன் வருகிறது. இந்த இண்டர்பெசிர்க்கு 24 மண்டலங்களை உள்ளடக்கிய மேல் பகுதியில் மூன்று LED ஸ்ட்ரைப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இந்த போன் பிளாஸ்டிக்கால் ஆனது, அதாவது வெளிப்புற ட்ரேன்ஸ்பரென்ட் ஷெல் மற்றும் பிரேம் முந்தைய நத்திங் ப்ரோடேக்ட்களிளிருந்து ரீசைகில் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த போன் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது.
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.7-இன்ச் ப்லேக்சிபல் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் 1300 நிட்ஸ் ப்ரைட்னாஸ் 1080×2412 பிக்சல் (FHD+)ரேசளுசன் செம்பளிங் ரேட் மற்றும் 10-பிட் கலர் ஆழத்தை சப்போர்ட் செய்கிறது சூரிய ஒளியில் இந்த பேனல் 1100 நிட்கள் வரை செல்லும். இந்த திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
பவர்புல் பர்போமன்சுக்கு இந்த போனில் ட்ரேன்ஸ்பரென்ட் ஸ்மார்ட்போன் உடன் இது மீடியா டெக் 7200 ப்ரோ சிப்செட்டுடன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேரை பொறுத்தவரை, இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் யின் இன்-ஹவுஸ் OS 2.5 UI இல் இயங்குகிறது. நிறுவனம் மூன்று வருட OS அப்டேட்களையும் , 4 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க: Aadhaar கார்ட் இலவச அப்டேட்டுக்கு இந்த தேதி தான் கடைசி நாள்
இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்புறத்தில் இரண்டு கேமரா செட்டப் இருக்கிறது 50MP OIS மெயின் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைட் கேமராவை வழங்குகிறது , இதை தவிர இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ காலுக்கு 32MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
நத்திங் போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது, இதை தவிர இதில் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்டப் மற்றும் இரண்டு HD மைக்ரோபோன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் ஆர்டிபியல் இன்டலிஜன்ஸ் (AI) உதவியால் வால்பேப்பர் ஜெனரேட் செய்ய முடியும்.. கனெக்டிவிட்டி விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த ஃபோனில் டூயல் சிம் 5G, 802.11 a/b/g/n/ac அல்லது ax (Wi-Fi 6), 2.4 GHz / 5 GHz டூயல்-பேண்ட், ப்ளூடூத் 5.3, A2DP, BLE, NFC உள்ளது. , GLONASS, BDS, GALILEO மற்றும் QZSS ஆகியவை அடங்கும்.