நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, நத்திங் ஃபோனின் (2) வெளியீட்டு தேதி இறுதியாக வெளி வந்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 11 ஆம் தேதி இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். நிறுவனம் இந்த தேதியை மீடியாக்களுக்கு உறுதி செய்துள்ளது. போனின் நிகழ்வு இரவு 8:30 மணிக்கு வைக்கப்படும். வரவிருக்கும் நத்திங் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பார்ப்போம்.
நத்திங் ஃபோன் (2) இந்தியாவில் சுமார் ரூ. 40,000 விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த போனின் டீஸர்கள் ஏற்கனவே இ-காமர்ஸ் தளங்களில் இருக்கிறது அதாவது இது பிளிப்கார்ட்டில் விற்கப்படும். நிறுவனம் உறுதிப்படுத்திய சிறப்பம்சங்கள் அடிப்படையில், போன் (2) அதே விலை ரேஞ்சில் OnePlus 11R மற்றும் Pixel 7a போன்ற போன்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் ஃபோனில் (2) ஃபிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். சாதனம் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 4,700எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். நிறுவனம் சார்ஜிங் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை இதை தவிர, கேமரா விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் நத்திங் ஃபோன் (1) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருப்பதால், ஃபோன் வேகமாக சார்ஜ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் அதன் புதிய ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு பேட்ச்களுடன் வரும்நிறுவனம் உறுதி கூறியுள்ளது சமீபத்திய நத்திங் ஓஎஸ் பில்ட் பயனர்களுக்கு வேகமான அனுபவத்தையும் கூடுதல் அம்சங்களையும் வழங்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. நிறுவனம் அதன் புதிய சாதனங்களுடன் சமீபத்திய இயக்க முறைமையை வழங்குவதால், சாதனம் Android 13 OS உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது