இன்டர்நெட்டில் லீக் ஆனது நோக்கியா X7….!
HMD . குளோபல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
HMD . குளோபல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் X7 வேரியன்ட் என்றும் இதில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஃபாக்ஸ்கான் ஊழியர்களின் மூலம் கிடைத்திருக்கும் நோக்கியா X7 புதிய புகைப்படம் விடெக்கிராஃபி மூலம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நோக்கியா X7 உற்பத்தி ஏற்கனவே துவங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய X7 மாடலின் போட்டோவின் படி இதன் டிஸ்ப்ளே நாட்ச் சமீபத்தில் அறிமுகமான நோக்கியா 5.1 பிளஸ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடலின் டிஸ்ப்ளே அளவு 6.0 இன்ச்-க்கும் அதிகமாவும், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோன்று, புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே நோக்கியா ஃபீனிக்ஸ் என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
புதிய 10என்.எம். ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இரண்டு க்ரியோ 360 கார்டெக்ஸ் ஏ75 கோர்கள், 1.7 GHZ ஆறு க்ரியோ 360 கார்டெக்ஸ் ஏ55 கோர்களை கொண்டிருக்கிறது.
மேலும் நோக்கியா X7 அல்லது ஃபீனிக்ஸ் ஸ்மார்ட்போன் விலை CNY 2,000 (இந்திய விலை ரூ.20,400) என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இதன் அறிமுகம் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile