ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நோக்கியா X சீரிஸ் இன் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பதோடு டூயல் வோல்ட்இ சப்போர்ட், 3060 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 எம்ஏஹெச் பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
நோக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,830) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,980) என்றும், நோக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.