digit zero1 awards

நோக்கியா X5 படஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

நோக்கியா X5  படஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X5 என பெயரிடப்பட்டுள்ளது.

HMD . குளோபல் தனது X சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X5 என பெயரிடப்பட்டுள்ளது.

நோக்கியா X5 ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 16:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓ.எஸ். கொண்டிருக்கும் நோக்கியா X5 ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதை கொண்டு ஏ.ஐ. போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் ஏ.ஐ. சார்ந்த செல்ஃபி போர்டிரெயிட் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

NokiaX5  சிறப்பம்சங்கள்:

– 5.86 இன்ச் 720×1520 பிக்சல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் 800MHz ARM 
– மாலி-G72 MP3 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், F/2.0, PDAF
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா X5 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo