Nokia T10 டேப்லெட் LED வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

Nokia T10 டேப்லெட் LED வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

நோக்கியா டி10 டேப்லெட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்து இருந்தது

தற்போது இந்த டேப்லெட்டின் எல்டிஇ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

HMD  குளோபல் நஇறுவனம் நோக்கியா டி10 டேப்லெட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த டேப்லெட்டின் எல்டிஇ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

நோக்கியா டி10 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி எல்டிஇ மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 799 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி எல்டிஇ மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி நோக்கியா வலைதளம் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Nokia T10 சிறப்பம்சம்.

நோக்கியா டி10 அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 8 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், யுனிசாக் டி606 பிராசஸர், அதிகபட்சம் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2MP செல்பி கேமரா மற்றும் 5250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

இந்த டேப்லெட் கைரேகை சென்சார் கொண்டிருக்கவில்லை, மாறாக பேஸ் அன்லாக் வசதியுடன் கிடைக்கிறது. இத்துடன் மாஸ்க் மோட் உள்ளது. இதை கொண்டு முகக் கவசம் அணிந்த நிலையிலும் டேப்லெட்-ஐ அன்லாக் செய்ய முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo