புதிய தோற்றத்துடன் Nokia இன்டெர்பெஸ் Pure UI ஐ அறிவித்துள்ளது ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.
நோக்கியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் மிகவும் பிரபலமான லோகோவை மாற்றியுள்ளது
இப்போது நிறுவனம் ஒரு நவீன மினிமலிஸ்டிக் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
Pure UI நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கிடைக்காது.
நோக்கியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் மிகவும் பிரபலமான லோகோவை மாற்றியுள்ளது. இப்போது நிறுவனம் ஒரு நவீன மினிமலிஸ்டிக் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், நிறுவனம் இந்தியாவில் ஒன்றன் பின் ஒன்றாக சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நோக்கியா தனது வரவிருக்கும் B2B மற்றும் நிறுவன தயாரிப்புகளுக்கான புதிய பயனர் இன்டெர்பெஸ் Pure UI ஐ அறிவித்துள்ளது. புதிய பயனர் இன்டெர்பெஸ் முன்பை விட எளிமையான இடைமுகத்துடன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான தோற்றத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், HMD குளோபல் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட Pure UI நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கிடைக்காது.
இந்த வரிசையில், நோக்கியா பியுர் யுஐ அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யுஐ வர்த்தக ரீதியிலான பொருட்களில் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக இந்த யுஐ ஹெச்எம்டி உற்பத்தி செய்யும் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது. புதிய யுஐ தனித்துவ தோற்றம் மற்றும் மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது.
புதிய தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கியா பியுர் யுஐ பின்னணியில் நோக்கியா பியுர் இண்டர்ஃபேஸ் பயன்படுத்தப்பட இருக்கிறது. பியுர் யுஐ-இல் புதிய ஐகான்கள், கஸ்டமைசேஷன் வசதியுடன் கிடைக்கின்றன. இவை குறிப்பிட்ட சாதனத்திற்கு ஏற்ற பயன்களை வழங்கும் என தெரிகிறது. இதில் உள்ள அனிமேஷன்கள் மென்மையாக காட்சியளிக்கின்றன.
முற்றிலும் புதிய டிசைன் பாரம்பரியம் கொண்டிருக்கும் நோக்கியா பியுர் யுஐ, நோக்கியா எதிர்காலத்தில் உருவாக்கும் புதிய சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இதன் ஸ்டைல் சிறப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile