HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் HD பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.
போட்டோ எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. AI. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா பேஸ் அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.
நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:
– 5.84 இன்ச் 2244×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
– 3060 Mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 Mah . பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.19,99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க முன்னணி மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் டிசம்பர் 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகை:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 4 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் டேட்டா, மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் நோக்கியா 7.1 மாத EMI யில் வாங்குவோர் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை கொண்டு பைன்லேப் மூலம் பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.