Nokia G60 5G இந்தியாவில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.

Updated on 08-Nov-2022
HIGHLIGHTS

நோக்கியா கடந்த வாரம் தான் நோக்கியா G60 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Nokia G60 5G உடன், நான்-ஸ்டாண்டலோன் (NSA) மற்றும் ஸ்டான்டலோன் (SA) 5G நெட்வொர்க்குகள் ஆதரிக்கப்படுகின்றன

நோக்கியா போனில் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா கடந்த வாரம் தான் நோக்கியா G60 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இன்று அதாவது நவம்பர் 08 அன்று நோக்கியா G60 5G இன் முதல் விற்பனை. Nokia G60 5G உடன், நான்-ஸ்டாண்டலோன் (NSA) மற்றும் ஸ்டான்டலோன் (SA) 5G நெட்வொர்க்குகள் ஆதரிக்கப்படுகின்றன. இது தவிர, இந்த நோக்கியா போனில் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Nokia G60 5G விலை தகவல்

நோக்கியா ஜி60 5ஜியின் 6 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.29,999. அதே ரேம் மற்றும் ஸ்டோரேஜில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஜி60 5ஜியை நோக்கியா இந்தியா ஸ்டோரில் கருப்பு மற்றும் ஐஸ் நிறங்களில் வாங்கலாம்.

Nokia G60 5G சிறப்பம்சம்.

நோக்கியா ஜி60 5ஜி ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது. ஃபோனில் 6.58-இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது, இது (1,080×2,400) பிக்சல் ரெஸலுசன்  மற்றும் 120Hz அப்டேட் வீதத்துடன் வருகிறது. டிஸ்ப்ளே 500 நிட்ஸ் பிரகாசம், 20: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. ஸ்னாப்டிராகன் 695 5ஜி செயலி மற்றும் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை இந்த போன் பெறும். நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களையும் , மூன்று ஆண்டுகளுக்கு OS அப்டேட்களையும் போனுடன் வழங்க உள்ளது

நோக்கியா G60 5G ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பெறுகிறது, இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், போனில் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா ஆதரவு கிடைக்கிறது. நைட் மோட் 2.0, டார்க் விஷன் மற்றும் ஏஐ போர்ட்ரெய்ட் ஆகியவை கேமராவுடன் கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :