Nokia G42 5G புதிய பிங்க் கலர் யின் 16 GB ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகும்

Updated on 10-Oct-2023
HIGHLIGHTS

HMD குளோபல் நிறுவனம் Nokia G42 5ஜியை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

புதிய நிற வகை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது

இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும்.

HMD குளோபல் நிறுவனம் Nokia G42 5ஜியை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. போனில் 6.56 இன்ச் HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி செயலி பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசியில் பெரிய பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது. இந்த நோக்கியா போன் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மற்றொரு புதிய வண்ண வகை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நிற வேரியன்ட் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

நோக்கியா G42 5G யின் நிறுவனம் இந்தியாவில் 12,599 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது சோ பர்பிள் மற்றும் சோ கிரே வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நிறுவனம் அதன் மற்றொரு நிற மாறுபாட்டைக் கொண்டுவருகிறது.

நோக்கியா இப்போது நோக்கியா G42 5G ஐ So Pink நிறத்தில் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் யின் சிங்கிள் வேரியண்டின் அறிமுகப்படுத்தப்பட்டது.

Nokia G42 5G சிறப்பம்சம்

நோக்கியா G42யில் 6.56 இன்ச் கொண்ட HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் சப்போர்ட் செகிறது ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா G42 5G ஆனது Qualcomm Snapdragon 480 Plus 5G செயலியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 யில் இயங்குகிறது.

நோக்கியா G42 5G ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இதனுடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை வழங்கியுள்ளது.

இந்த ஃபோன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 20W வேகமான வயர்டு சார்ஜருடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு இந்த ஃபோன் இயங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

இதையும் படிங்க: Amazon Great Indian Festival Sale:20 ஆயிரத்திற்குள் Refrigerator யில் செம்ம ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :